HomeMovie Reviewவல்லான் சினிமா விமர்சனம்

வல்லான் சினிமா விமர்சனம்

Published on

சஸ்பென்சனில் இருக்கிற போலீஸ் இன்ஸ்பெக்டரை கூப்பிட்டு, கொலை கேஸை ஒப்படைக்கிற பழகிப் போன கதைகளின் வரிசையில் மற்றொரு படம். குற்றவாளி யார் என்ற சஸ்பென்ஸை கடைசிவரை தக்க வைத்திருக்கிற திரைக்கதையோடு ‘வல்லான்.’

கிறிஸ்தவ மதபோதகர் ஒருவரின் மருமகன் முகமும் உடலும் சிதைத்துக் கொல்லப்படுகிறார். அந்த குற்றத்தை செய்தது யார் என்பதை கண்டறியும் பொறுப்பு, உயரதிகாரியை அடித்ததால் சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கிற திவாகருக்கு வழங்கப்படுகிறது. தான் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண் காணாமல் போனதற்கும் ந்டந்த கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தோன்றவே விசாரணையை தீவிரப்படுத்துகிறார் திவாகர். அந்த விசாரணையில் அவரிடம் சிக்குகிற குற்றவாளி யார்? கொலைக்கு காரணம் என்ன? என்பது கதையின் கிளைமாக்ஸ்…

திவாகராக சுந்தர் சி. மனைவியாகப் போகிறவர் காணாமல் போன மன வேதனையை முகத்தில் பிரதிபலித்தபடி, கொலைக் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதை பொருத்தமான கம்பீரத்துடன் செய்திருக்கிறார்.

தன்னை பெண் பார்க்க வரும் சுந்தர் சி யிடம் நடந்துகொள்ளும் விதத்தையும் அவரது விருப்பத்துக்கு கிரீன் சிக்னல் கொடுக்கும் தருணத்தையும் ரசிக்கும்படி செய்திருக்கிறார் தான்யா ஹோப்.

படத்தின் இன்னொரு ஹீரோயினாகியிருக்கிற ஹெபா படேல் கவர்ச்சியான உடைகளில் சுற்றித் திரிகிறார்; வழக்கு விசாரணையில் சம்பந்தப்பட்டிருப்பதால் ஹீரோவோடு சேர்ந்து துப்பு துலக்குவதில் துணை நிற்கிறார்.

கொல்லப்படுகிற நபராக கமல் காமராஜ், அவரது மனைவியாக அபிராமி வெங்கடாசலம், மதபோதகராக ஜெயக்குமார், அவர் வீட்டுப் பணிப்பெண்ணாக சாந்தினி தமிழரசன் என மற்ற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. அவர்கள் அதை உணர்ந்து நடித்திருக்க, சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசை கதையின் நகர்வில் சுறுசுறுப்புக்குப் பஞ்சமில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.

கதைக்களம் வழக்கமானதுதான் என்றாலும் என்றாலும் நடந்த குற்றத்திற்கான பின்னணி பரபரப்புக்கு உதவியிருக்க, காட்சிகளின் நீளத்தைக் குறைத்து படத்தை சோர்வின்றி பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் மணி சேயோன்.

Rating 3 / 5

Latest articles

கோகினூர் வைரத்தின் வரலாற்றுப் பதிவுகளை வைத்து உருவான கோகினூர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! படத்தொகுப்பு, பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் விறுவிறுப்பு.

எஸ்.பி.ஜி சினிமாஸ் சார்பில் ராஜம் இ.கஜேந்திரா தயாரித்து இயக்கியுள்ள படம் 'கோகினூர்.' படத்தின் கதை வைரங்களின் ராணியாக திகழும் கோகினூர்...

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், டிஜிட்டல் திரை நட்சத்திரமும், 'டிராகன்'...

கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=65mrBBZbSbo கார்த்தி கதாநாயகனாக, இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும்...

பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்த க்ரைம் டிராமா ‘பீப்’ செப்டம்பரில் ரிலீஸ்!

‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இல.சண்முகசுந்தர் கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘பீப்.’ எம் குவெஸ்ட்...

More like this