HomeCinemaபிரேமலு போல இந்தப்படமும் பெரிய வெற்றி பெறும்! -'2K லவ்ஸ்டோரி' பட விழாவில் இயக்குநர் சுசீந்திரன்...

பிரேமலு போல இந்தப்படமும் பெரிய வெற்றி பெறும்! -‘2K லவ்ஸ்டோரி’ பட விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேச்சு 

Published on

இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை மையப்படுத்திய படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் சுசீந்திரன் இயக்கியுள்ள ‘2K லவ்ஸ்டோரி’ திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் சுசீந்திரன், மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. 2கே லவ்ஸ்டோரி எனக்கு மிக முக்கியமான படம். தயாரிப்பாளர் விக்னேஷுக்கு என் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். ஒரு திரைப்படத்தை மக்களிடம் எடுத்துச் செல்வது முக்கியம், அதை தன் படமாக எடுத்துச் செல்லும் தனஞ்செயன் சாருக்கு என் நன்றி. என்னை வாழ்த்த எனக்காக வந்த எழில் சார், அருள் தாஸ் அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் என்னை நம்பி பயணித்த நடிகர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பிரேமலு ரிலீசான அன்று அது யாருக்கும் தெரியாது, அடுத்த ஷோவில் உலகத்திற்கே தெரிந்தது. அது போல இந்தப்படமும் பெரிய வெற்றி பெறும். பிரேமலு மாதிரி பெரிய கலக்சன் எடுக்கும் படமாக இப்படம் இருக்கும். அனைவருக்கும் என் நன்றிகள்” என்றார்.

படத்தை வெளியிடுகிற தயாரிப்பாளர் தனஞ்செயன், ”படம் பார்த்து இரண்டாம் பாதியில் எனக்கு சில காட்சிகளில் கருத்து வேறுபாடு இருந்தது, ஆனால் அதைச் சொல்லத் தயங்கினேன். ஆனால் சுசி சார் அதை நான் மாற்றி விட்டேன் என்றார், என் கருத்துக்களுக்கு மதிப்பு தந்தார். இயக்குநர்கள் என் படத்தில் கருத்துச் சொல்ல நீ யார்?, என் படத்தை அப்படியே ரிலீஸ் செய்வது என்றால், செய்! என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லாமல், நான் சொன்னதைக் கேட்டு, மக்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காகப் படத்தின் காட்சிகளை மாற்றியமைத்த சுசீந்திரன் சாருக்காக இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்” என்றார்.

தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன், இசையமைப்பாளர் இமான், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, நடிகை லத்திகா, நடிகை வினோதினி, நடிகர் முருகானந்தம், இயக்குநர் நடிகர் பாக்யராஜ் கண்ணன், நடிகர் பாலசரவணன், நடிகர் அருள்தாஸ், நடிகை திவ்யா துரைசாமி, இயக்குநர் எழில், நடிகை மீனாட்சி கோவிந்தராஜன், அறிமுக நாயகன் ஜெகவீர்,  உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

Latest articles

கார்த்திகை தீபத் திருநாளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்த ‘அறுவடை’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ்!

‘லாரா’ திரைப்படத்தைத் தயாரித்து, நடித்தவர் மு. கார்த்திகேசன். தொடர்ந்து தனது எம். கே. பிலிம் மீடியா ஒர்க்ஸ் பி.லிட் ...

ஸ்ருதிஹாசன் நடிக்கும் திரைப்படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ்!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களையும், தரமான படைப்புகளையும் தொடர்ந்து வழங்கி வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தனது அடுத்த...

மார்வெல் ஸ்டுடியோஸின் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் இறுதி டிரெய்லர் வெளியீடு!

டாக்டர் டூமுக்கு எதிராக ஒன்றிணையும் அவெஞ்சர்ஸ், எக்ஸ்-மென், ஃபென்டாஸ்டிக் ஃபோர் மற்றும் தண்டர்போல்ட்ஸ் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற...

பிரேம் குமார் – ஃபஹத் ஃபாசில் கூட்டணியின் ‘அசரீரி’ புத்தாண்டு வெளியீடாக திரைக்கு வருகிறது!  

‘96’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த இயக்குநர் பிரேம் குமார், தொடர்ந்து...

More like this