HomeCinemaபுதுமுகங்களை வைத்து படம் இயக்க நினைத்தது ஏன்? -தருணம் பட நிகழ்வில் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன்...

புதுமுகங்களை வைத்து படம் இயக்க நினைத்தது ஏன்? -தருணம் பட நிகழ்வில் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் விளக்கம்

Published on

படு சுவாரஸ்யமான திரில்லராக உருவான ‘தேஜாவு’ படம் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கி பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 அன்று உலகமெங்கும் வெளியாகவிருக்கும் ‘தருணம்’ படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய படத்தின் நாயகன் கிஷன் தாஸ், ”பொங்கலுக்கு வெளியாகும் பல படங்களில் எங்கள் படமும் ஒன்று. உங்கள் முழு ஆதரவைத் தந்து, நீங்கள் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இந்தப்படத்திற்காக அரவிந்த் என்னை அழைத்தார். தேஜாவு இயக்குநர் என்ற உடனே, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு வெற்றிப் படம் தந்த, இயக்குநர் என்னைத் தேடி வந்தது எனக்கு ஆச்சரியம் தான். நானும் பயங்கரமாக திரில்லர் கதை சொல்வார் என்று நினைத்தேன். ஆனால் முழுக்க முழுக்க ரொமான்ஸ் உடன் ஒரு கதை சொன்னார். இடைவேளைக்குப் பிறகு அவர் சொன்ன கதை, முழு திரில்லராக அவர் பாணியிலிருந்தது. கதை கேட்டவுடன் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது, கதையில் ஒரு ஆபீஸர் கேரக்டர், படத்தில் பாட்டு, ஃபைட் எல்லாமே இருக்கிறது. இந்த கதைக்கு நான் தாங்குவேனா? என்று கேட்டேன், ஆனால் அரவிந்த் கண்டிப்பாக நீங்கள் சரியாக இருப்பீர்கள் என்று ஊக்கம் தந்தார். என் மீது முழு நம்பிக்கை வைத்தார். அந்த கேரக்டர் எப்படி இருக்க வேண்டும் என, எனக்கு நிறையச் சொல்லித் தந்தார்.

புகழ் & ஈடன் இருவருக்கும் இது முதல் திரைப்படம். இப்போதுள்ள திரைத் துறையில் முதல் படம் செய்வது எத்தனை கடினம் என்பது தெரியும். அதைத் தாண்டி மிகச் சிறப்பாக இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்கள், இப்படம் அவர்களுக்காகப் பெரிய வெற்றி பெறும் வாழ்த்துகள். ஸ்ம்ருதி வெங்கட் மிகச்சிறந்த கோ ஸ்டார், இந்தபடம் ஆரம்பித்ததிலிருந்து, இப்போது வரை எங்களுக்கு நிறையத் தருணம் இருந்தது அவருக்கு நன்றி. கீதா கைலாசம் மேடம் பார்த்தால், என் அம்மா ஞாபகம் தான் வரும் அவருடன் நடித்தது மகிழ்ச்சி.

பாலசரவணன் ஒரு அருமையான ரோல் செய்துள்ளார். என்னை நம்பி டான்ஸ் ஆட வைத்த, பாபி மாஸ்டருக்கு நன்றி. அருள் மிகச்சிறப்பாக எடிட் செய்துள்ளார் நன்றி. கார்கி சாருக்கு நான் மிகப்பெரிய ஃபேன், அவர் இந்தப்படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி. என்னை நம்பி இந்தப்படம் தந்த அரவிந்துக்கு நன்றி. எல்லாச் சின்ன படத்திற்கும் ஆதரவு தரும் தனஞ்செயன் சாருக்கு நன்றி. என் முதல் படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆதரவு தந்தது பத்திரிக்கையாளர்கள் தான், இந்தப்படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.

இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன், ”நான் பத்திரிக்கையாளராக இருந்து தான் சினிமாவுக்குள் வந்துள்ளேன், நீங்கள் எனக்குத் தந்து வரும் ஆதரவு மிகப்பெரியது நன்றி. தருணம் படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. புகழ் & ஈடன் இருவருக்கும் இது முதல் திரைப்படம். என்னை நம்பி இந்தப்படத்தை தயாரித்ததற்கு நன்றி. முதல் படத்தில் எல்லோரும் புது முகம் என்றால் தயங்குவார்கள், ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து, நீங்கள் தான் இயக்குநர் நீங்கள் என்ன சொன்னாலும் சரிதான், என்று சொல்லி இந்த படத்தைத் தயாரித்தார்கள் அவர்களுக்கு என் நன்றிகள்.

என் முதல் படத்தை முடித்த சமயத்தில் தான், கிஷன் நடித்த படத்தைப் பார்த்தேன். அவர் இந்தப் படத்திற்கு மிகச் சரியாக இருப்பார் என்று என் நண்பரிடம் சொன்னேன். அவரிடம் கதை சொன்னேன் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. வழக்கமாக நாம் ஒரு படத்தை முடித்த பிறகு, ஹீரோவே இல்லை, பெரிய ஹீரோ கால்ஷீட் இல்லை என்பார்கள். ஏன் ஒரு படத்தை முடித்துவிட்டு, பெரிய ஹீரோவைத் தேட வேண்டும், இங்கு இருக்கும் ஹீரோக்களை வைத்து படம் எடுக்கலாமே? புதிய ஹீரோக்களைக் கூட்டி வரலாமே? என்பேன். நீ ஒரு படம் செய்தால், நீயும் பெரிய ஹீரோவைத்தான் தேடிச் செல்வாய் என்றார்கள். அதற்காகவே நான் புது முகங்களை வைத்து, படம் இயக்க வேண்டும் என்று நினைத்தேன். தனஞ்செயன் சார் படம் பார்த்துவிட்டு கிஷன் நம்பர் வாங்கி பாராட்டினர். அப்போது நான் என்ன செய்ய நினைத்தேனோ அதைச் செய்து விட்டேன் என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.

ஸ்ம்ருதி வெங்கட் என்னுடைய தேஜாவு படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரம் செய்தார், அப்போதே அவரிடம் சொல்லியிருந்தேன், உங்களது நடிப்பு நன்றாக இருக்கிறது, ஒரு நல்ல படத்தில் உங்களைக் கதாநாயகியாகப் போடுவேன் என்றேன். அவர் நம்பவில்லை, இந்தப் படம் ஆரம்பித்த பொழுது, அவர்தான் சரியாக இருப்பார் என்று சொன்னேன். எல்லோரும் தயங்கினார்கள், ஆனால் நான் அவர்தான் சரியாக இருப்பார், இதுவரை செய்யாதவர் இந்தக்கதாபாத்திரம் செய்தால் தான் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கதை சொன்னேன். சில விசயங்கள் படத்தில் இருக்கும் யோசித்துச் சொல்லுங்கள் என்றேன். அவருக்குக் கதை பிடித்து இருந்தது. இப்படத்தில் மிக நன்றாக நடித்துள்ளார்.

ராஜ் ஐயப்பா என்னிடம் வாய்ப்பு கேட்டிருந்தார், அவர் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுகிறார் எனத் தயங்கினேன், பின்னர் ஒரு நாள் அவரை அழைத்துக் கதை சொன்னேன், அவருக்குப் பிடித்திருந்தது, மிக சிறப்பாக நடித்திருக்கிறார். எல்லோரும் கிஷன் சொல்லித் தான் தர்புகா சிவா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்று நினைக்கிறார்கள், ஆனால் இந்த படத்திற்கு ஆரம்பத்திலேயே முடிவு செய்தது அவரைத்தான். அவரிடம் கதை சொன்னேன் அவர் எளிதாக எந்த படத்தையும் ஒப்புக் கொள்வதில்லை, முழு பவுண்டேட் ஸ்கிரிப்ட் கேட்டார், படித்துவிட்டு அவரே அழைத்து, படத்தின் கதை நன்றாக இருக்கிறது நான் செய்கிறேன் என்றார். மிக அட்டகாசமான பாடல்கள் தந்துள்ளார் அவருக்கு நன்றி.

என் முதல் படத்தின் எடிட்டர் அருள் தான் இந்தப்படத்திற்கும் எடிட்டர். அவருக்கும் எனக்கும் நிறையச் சண்டை வந்தாலும் அவர் எடிட்டிங் மிகச் சிறப்பாக இருக்கும். பலரும் டிரெய்லர் பார்த்து, எடிட் கட் நன்றாக இருப்பதாகப் பாராட்டினார்கள். அஸ்வின் இந்த படத்திற்காக நான்கு மாதங்கள், பின்னணி இசை அமைத்திருக்கிறார். கார்கி சார் ரசிகன், அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கிட்டத்தட்ட ஒவ்வொரு ஃபிரேமாக செதுக்கி இருக்கிறார். ஒரு தரமான படைப்பு வரும் போது நீங்கள் கைவிட்டதில்லை, அந்த நம்பிக்கையில் தான் படத்தை, பொங்கலுக்குக் கொண்டு வருகிறோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.

படக்குழு:-
எழுத்து, இயக்கம் – அரவிந்த் ஶ்ரீநிவாசன்
ஒளிப்பதிவு – ராஜா பட்டாசார்ஜி
இசை – தர்புகா சிவா
படத்தொகுப்பு – அருள் இ சித்தார்த்
கலை இயக்குனர் – வர்ணாலயா ஜெகதீசன்
சண்டைப்பயிற்சி – ஸ்டன்னர் சாம்
தயாரிப்பு – புகழ் ஏ, ஈடன் (ZHEN STUDIOS )
மக்கள் தொடர்பு – AIM சதீஸ், சிவா

Latest articles

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கிய அல்லு அர்ஜுன்… ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு உற்சாகம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து...

More like this

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...