HomeCinemaஜீ.வி. பிரகாஷ், செல்வராகவன் இணையும் மென்டல் மனதில் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

ஜீ.வி. பிரகாஷ், செல்வராகவன் இணையும் மென்டல் மனதில் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

Published on

ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, காதல் படைப்புகளை உருவாக்குவதில் தனித்துவமான முத்திரை பதித்த செல்வராகவன இயக்கும் ‘மெண்டல் மனதில்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.

மாதுரி ஜெயின் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. வண்ணத்துப்பூச்சி பின்னணியில் கதையின் நாயகனான ஜீ.வி. பியின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதை தொடர்ந்து இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தைப் பற்றிய புதிய தகவல்களை பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ‘ 7 ஜி ரெயின்போ காலனி ‘, ‘ஆடவரி மாதலக்கு அர்த்தலே வெருள’ ( தமிழில் யாரடி நீ மோகினி) ஆகிய காதலை மையப்படுத்திய படைப்புகளைத் தொடர்ந்து காதலை உரக்க பேசும் ‘மெண்டல் மனதில்’ படத்தில் இயக்குநர் செல்வராகவனும், ‘இசை அசுரன்’ ஜீ.வி. பிரகாஷ் குமாரும் இணைந்திருப்பதால்..’ இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

படக்குழு:- அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ஆர். கே. விஜய் முருகன் கவனிக்க, பட தொகுப்பு பணிகளை பாலாஜி மேற்கொள்கிறார். தினேஷ் குணா எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கும் இந்த திரைப்படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.

Latest articles

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

More like this