பிக்பாஸ்’ ராஜூ நடித்திருக்கும் ‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் டீசர் நாளை டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் விடுதலை – 2 படத்துடன் இணைந்து திரையரங்குகளில் வெளியாகிறது.
ராகவ் மிர்தாத் இயக்கத்தில் ஆத்யா பிரசாத் & பவ்யா திரிகா நடிப்பில், இன்றைய Gen Z தலைமுறை ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவை ததும்பச் சொல்லும், அழகான டிராமாவாக உருவாகியுள்ளது ‘பன் பட்டர் ஜாம்.’
இறந்தகால வலிகளின் சுமைகளுக்கும், எதிர்காலத்தைப் பற்றிய பயங்களுக்கும் நடுவே ஊசலாடாமல், நிதானமாக நின்று நிகழ்காலத்தை புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் Gen Z இளைஞர்களைப் பற்றிய கதைதான் பன் பட்டர் ஜாம்.
ஒருவனை சுற்றி எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அந்தந்த கணத்தை முழுமையாக வாழப் பழகினால், கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை என்கிற பாசிட்டிவிவான கருத்தை பரபரப்பாகவும், முழுக்க முழுக்க நகைச்சுவை ததும்பச் சொல்லும் வகையிலும், இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
சைஸ் ஜீரோ, பாரம் படங்களின் திரைக்கதையை எழுதியவரும், காலங்களில் அவள் வசந்தம் பட இயக்குநருமான ராகவ் மிர்தாத், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பீல் குட் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
பிக்பாஸ் புகழ் ராஜூ நாயகனாக நடிக்கிறார், ஆத்யா பிரசாத் & பவ்யா திரிகா நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சார்லி, மைக்கேல் தங்கதுரை & வி ஜே பப்பு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

