HomeCinemaபிரபல நகைச்சுவை நடிகரும் பாடகருமான சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் ‘குளோபல் ஒன் ஸ்டுடியோஸ்.’

பிரபல நகைச்சுவை நடிகரும் பாடகருமான சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் ‘குளோபல் ஒன் ஸ்டுடியோஸ்.’

Published on

பல பிராந்திய மொழிகளில் வெற்றிப் படங்களைக் கொடுத்து தன்னை மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக நிலைநிறுத்தி உள்ளது குளோபல் ஒன் ஸ்டுடியோஸ். இப்போது நகைச்சுவை மேதை, நடிகர், பாடகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை பயோபிக்காக எடுக்க அவரது சகோதரர் ஜவஹரிடமிருந்து பெற்றுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான கே. ராஜேஷ்வர் எழுதிய ’JP: THE LEGEND OF CHANDRABABU’ நாவலின் உரிமையை தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது.

சந்திரபாபு படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார். கதையை மேலும் மேம்படுத்த, பாடலாசிரியரும் எழுத்தாளருமான மதன் கார்க்கி கூடுதல் திரைக்கதை, வசனங்கள் மற்றும் வசீகரிக்கும் பாடல் வரிகளை எழுதுகிறார். இந்தக் கூட்டணி நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்.

இந்தப் படம் சந்திரபாபுவுக்கு மறக்க முடியாத அஞ்சலியாக இருக்கும் என குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் உறுதியாக நம்புகிறது.

ஜியோ ஸ்டுடியோஸின், துல்கர் சல்மான் நடித்த ‘ஹே சினாமிகா’ படம் மற்றும் ‘ராமன் தேடிய சீதை’, ‘சாருலதா’, ’அலோன்’, உள்ளிட்ட திரைப்படங்களை குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு ’கோலி சோடா- தி ரைசிங்’ வெப் தொடரையும் தயாரித்திருக்கிறது.

Latest articles

பல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் ஹெர் (HER) பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!

Be The One Longevity Centre நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிளினிக்கல் இயக்குநரான டாக்டர் இர்ஃபானா ஹமீத், பெண்களின்...

இரா.சரவணன் இயக்கத்தில் அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2.’

‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தனது...

என்னுடைய நடிப்பை தயாரிப்பு தரப்பு சிறப்பு என பாராட்டியிருக்கிறார்கள்! -சிக்மா பட விழாவில் நடிகர் சந்தீப் கிஷன் உற்சாகம்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க, வந்தை பிரேம் இயக்கும் ‘மறுஜென்ம காதல்’ படம் பூஜையுடன் துவக்கம்!  

வந்தை பிரேம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் 'மறுஜென்ம காதல்' திரைப்படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க...

More like this