HomeCinema’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தில் பணிபுரிவது ஒரு அரிய வாய்ப்பு! -நடிகர் நாசர்

’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தில் பணிபுரிவது ஒரு அரிய வாய்ப்பு! -நடிகர் நாசர்

Published on

’முஃபாசா: தி லயன் கிங்’ டிசம்பர் 20, 2024 அன்று வெளியாகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘தி லயன் கிங்’ வெற்றியைத் தொடர்ந்து வெளியாகும் இந்த படத்தில் தமிழில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு நடிகர்கள் அர்ஜுன் தாஸ், டாக்காவுக்கு அசோக் செல்வன், ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி முறையே பும்பா மற்றும் டிமோன், ரஃபிக்கியின் இளைய பதிப்பிற்கு நடிகர் விடிவி கணேஷ் மற்றும் கிரோஸின் குரலாக நடிகர் எம். நாசர் ஆகியோர் குரல் கொடுத்திருக்கின்றனர்.

முஃபாசா: தி லயன் கிங் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நாசர் கூறுகையில், “”நடிகராக எனது பயணத்தைத் தொடங்கும் முன்பே, பல படங்களுக்கு டப்பிங் கலைஞராக பணியாற்றி உள்ளேன். லயன் கிங்கின் முதல் ரசிகன் நான். அந்தப் படத்திற்கான டப்பிங் வாய்ப்பு வரும்போது எப்படி நிராகரிக்க முடியும்? தனது தன்னம்பிக்கையால் ரசிகர்களைக் கவர்ந்த மறக்க முடியாத கதாபாத்திரம் கிரோஸ். டப்பிங்கின் போது அவரது திரை இருப்பை பொருத்த என்னால் முடிந்த முயற்சிகளை செய்திருக்கிறேன். கிரோஸிடம் எனக்குப் பிடித்தது என்னவென்றால், அவர் எதை நம்புகிறாரோ அதற்காக அவர் போராடுவார்.

இந்தப் படம் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல, பெரியவர்களுக்குமானது. ஒவ்வொரு பெரியவர்களிடமும் குழந்தை போன்ற குணம் இருக்கும். இந்தப் படம் அவர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை கொடுக்கும். முஃபாசா பாசிட்டிவிட்டியை பரப்பி, அனைவருக்கும் மகிழ்ச்சியான அனுபவத்தைக் கொடுக்கிறது” என்றார்.

Latest articles

பல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் ஹெர் (HER) பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!

Be The One Longevity Centre நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிளினிக்கல் இயக்குநரான டாக்டர் இர்ஃபானா ஹமீத், பெண்களின்...

இரா.சரவணன் இயக்கத்தில் அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2.’

‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தனது...

என்னுடைய நடிப்பை தயாரிப்பு தரப்பு சிறப்பு என பாராட்டியிருக்கிறார்கள்! -சிக்மா பட விழாவில் நடிகர் சந்தீப் கிஷன் உற்சாகம்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க, வந்தை பிரேம் இயக்கும் ‘மறுஜென்ம காதல்’ படம் பூஜையுடன் துவக்கம்!  

வந்தை பிரேம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் 'மறுஜென்ம காதல்' திரைப்படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க...

More like this