HomeCinemaமுதல் முறையாக ஆன்மிகப் பாடல்களுக்கு இசையமைத்த வித்யாசகர்... பக்திப் பரவசம் தரும் 'அஷ்ட ஐயப்ப அவதாரம்'...

முதல் முறையாக ஆன்மிகப் பாடல்களுக்கு இசையமைத்த வித்யாசகர்… பக்திப் பரவசம் தரும் ‘அஷ்ட ஐயப்ப அவதாரம்’ ஆல்பம் வெளியானது!

Published on

இசையமைப்பாளர் வித்யாசாகர் தென்னிந்திய சினிமாவில் 225க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்றவர். முன்னணி நட்சத்திரங்களின் வெற்றிப் பாடல்கள் முதல், காலத்தால் அழியாத பல அற்புதமான மெலடி பாடல்களைத் தந்து, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த அவர், முதன் முறையாக ஆன்மிக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

அவரது இசையில் உருவான ‘அஷ்ட ஐயப்ப அவதாரம்’ எனும் ஐயப்பனின் புகழ் பாடும் பாடல்களின் தொகுப்பை, சுயாதீன ஆல்பங்கள், திரைப்பட பாடல் இசை, ஆன்மீக ஆல்பம் என இந்திய இசைத்துறையில் கோலோச்சும் முன்னணி இசை நிறுவனமான
சரிகமா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பாடல்களை முன்னணி நட்சத்திர பாடகர்கள் சித்ரா, ஷங்கர் மகாதேவன், ஹரிசரண், விஜய் பிரகாஷ், புஷ்பவனம் குப்புசாமி முதலாக பல முன்னணி பாடகர்கள் பாடியுள்ளனர்.

இந்த பாடல்களின் ஆடியோ வடிவம் வெளியாகி, இசை தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வீடியோ வடிவில் இதுவரை 4 பாடல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான ‘கருப்பு வராரு’ வீடியோ பாடலில், தினேஷ் மாஸ்டர் நடனமைக்க, இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் நடனமாடியுள்ளார்.

பாடல்களின் விவரம்:-

1.அஷ்ட ஐயப்ப அவதாரம்
வித்யாசாகர், திருப்புகழ் மதிவண்ணன், விஜய் பிரகாஷ்

2.காடேரி மலையேரி வித்யாசாகர், முரளிகிருஷ்ணன் ரங்கன்

3.தங்கத்திலே வீடு கட்டி
வித்யாசாகர், கே.எஸ்.சித்ரா

4.அய்யனே
வித்யாசாகர், சந்தீப் நாராயண்

5.ஹரி ஓம்
வித்யாசாகர், விஜய் பிரகாஷ், டாக்டர் கிருத்தியா

6.கருப்பு வராரு
வித்யாசாகர், சங்கர் மகாதேவன், டாக்டர் கே.பி. வித்தியாதரன்

7.கண்ட கண்ட
வித்யாசாகர், ஹரிசரண், நெல்லை ஜெயந்தா

8.துள்ளி வரகுது வேல்
வித்யாசாகர், அபிநயா செண்பகராஜ், மாளவிகா ராஜேஷ், சுஷ்மிதா நரசிம்மன், அபர்ணா நாராயணன், வாலி

9.வில்லாளி வீரனே
வித்யாசாகர், புஷ்பவனம் குப்புசாமி, டாக்டர் கிருத்தியா

10.பம்பா கணபதி
வித்யாசாகர், மது பாலகிருஷ்ணன், பா.விஜய்

கீழ்காணும் லிங்கில் அனைத்து பாடல்களையும் கேட்டு ரசிக்கலாம்.
https://linktr.ee/ashtaayyappaavatharam

ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் சார்பில், முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் இந்த ஆல்பத்தை தயாரித்துள்ளார்.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this