HomeCinemaகனமழை, புயலால் டிசம்பர் 27-ம் தேதிக்கு தள்ளிப்போன 'ராஜா கிளி' படத்தின் ரிலீஸ்!

கனமழை, புயலால் டிசம்பர் 27-ம் தேதிக்கு தள்ளிப்போன ‘ராஜா கிளி’ படத்தின் ரிலீஸ்!

Published on

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் ‘மிக மிக அவசரம்’, ‘மாநாடு’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தயாரித்துள்ள படம் ‘ராஜா கிளி.’

வரும் டிசம்பர் 13-ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவின் போது அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்கள் கன மழையால் பாதிக்கப்பட்டு மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள், வரும் டிசம்பர் 13-ஆம் தேதி மீண்டும் ஒரு கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை மையத்தில் இருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மழை நாட்களில் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை சமாளிக்கவே போராடும் சூழ்நிலையில் ‘ராஜா கிளி’ படத்தை டிசம்பர் 13-ல் வெளியிடுவது சரியாக இருக்காது எனக் கருதிய படத்தின் ரிலீஸ் தேதியை டிசம்பர் 27-ம் தேதிக்கு மாற்றியுள்ளார்.

இது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் பேசியபோது, ”’ராஜா கிளி’ இன்றைய காலத்திற்கு ஏற்ற ‘ரத்தக்கண்ணீர்’ போன்ற ஒரு நல்ல கருத்தம்சம் கொண்ட படம் என்பதால் மக்கள் இந்த படத்தை தங்கள் பிரச்சனைகளை மறந்து திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ரிலீஸ் தேதி மாற்றம்” என்றார்.

கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகமாகிறார்.

தம்பி ராமையா இந்த படத்தில் கதைநாயகனாக நடிக்க அவரது வெற்றி கூட்டணியாக வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பாடகர் கிரிஷ், வெற்றிக்குமரன், இயக்குநர் மூர்த்தி, ஷ்வேதா ஷிரிம்டன், சுபா, பிரவீன், முபாஸிர், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Latest articles

பவிஷ், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன் நடித்த ‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பவிஷ் நாராயண், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர்...

மதுரை மண்ணின் கலாச்சார திருவிழாவாக மாறிய சூர்யாவின் ‘கருப்பு ‘திரைப்பட இசை வெளியீட்டு விழா

சூர்யாவின் நடிப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை...

அஞ்சாமை டூ பிரேக்பாஸ்ட்… இளம் நடிகர் க்ரித்திக் மோகனின் அசத்தலான பயணம்!

தமிழ் சினிமாவில் அமைதியான அலையாக நுழைந்து, இப்போது அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் ஒரு இளம் நாயகன். அவர்தான்...

புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், சற்குணம் இயக்கியுள்ள சஸ்பென்ஸ் டிராமா ‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 முதல் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீமாகிறது!

வால்வாட்சர் ஃபிலிம் நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர்...

More like this