HomeCinemaசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாராட்டைப் பெற்ற சசிகுமாரின் 'நந்தன்' படக்குழு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாராட்டைப் பெற்ற சசிகுமாரின் ‘நந்தன்’ படக்குழு!

Published on

சசிகுமார் நடிப்பில், இயக்குநர் இரா. சரவணன் எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் ‘நந்தன்’. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னும், வெளியான பின்னும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும்… ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகார பகிர்வு குறித்த யதார்த்த நிலையை நந்தன் துணிச்சலுடனும் எடுத்துரைத்திருக்கிறார்’ என பாராட்டினர். விமர்சகர்களும் ‘நந்தன்’ திரைப்படத்தை கொண்டாடினர். ரசிகர்கள் – விமர்சகர்கள்- திரையுலகினர் – திரையுலக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற ‘நந்தன்’ திரைப்படம் சமீபத்தில் டிஜிட்டல் தளத்தில் வெளியானது.

‘நந்தன்’ திரைப்படத்தை டிஜிட்டல் தளத்தில் பார்வையிட்ட பல முன்னணி பிரமுகர்களும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் படத்தை பார்த்து, நடிகர் சசிகுமார், இயக்குநர் இரா . சரவணன், விநியோகஸ்தர் டிரைடன்ட் ரவி ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ‘நந்தன் மிகத் தரமான தைரியமான படம்’ என மனம் திறந்து பாராட்டினார். இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

‘நந்தன்’ திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களின் வரவேற்பை பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது!

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this