HomeCinemaஅர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடிக்கும் ஒன்ஸ்மோர் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது!

அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடிக்கும் ஒன்ஸ்மோர் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது!

Published on

அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடிக்க, அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ள படத்திற்கு, ‘ஒன்ஸ்மோர்’ என பெயரிட்டுள்ள டீசரையும் வெளியிட்டுள்ளது படக்குழு. அர்ஜுன் தாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த டீசர் வெளியாகியுள்ளது.

‘ஹிருதயம்’, ‘குஷி’, ‘ஹாய் நன்னா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து பான் இந்திய அளவிலான இசையமைப்பாளராக உயர்ந்திருக்கும் ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். தனித்துவமான இசை மற்றும் உணர்வுபூர்வமான பின்னணி இசை மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இசையமைப்பாளர் ஹேஷாம். இவர் இசையில் உருவான பாடல்கள் இணையத்தில் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது. மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர், ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இதனால் இந்தப் படத்தின் பாடல்களுக்கும், ஆல்பத்திற்கும் இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ராஜ்கமல் கலை இயக்கத்தை கவனிக்க நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தை பொழுதுபோக்கு படைப்பாக ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கிறார்.

படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Latest articles

கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

அதிகாரம், பாரம்பரியம், பழிவாங்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான கேங்ஸ்டர் கதையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே...

அர்ஜுன் தாஸ் முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ஜான் டோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அர்கா மீடியாஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஷோபு யார்லகட்ட - பிரசாத் தேவினேனி ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் மதுமிதா...

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பிரமாண்டமான OTT சீரிஸ்கள்… திரைப்படத் தயாரிப்பிலும் தீவிரமாகக் களமிறங்கும் ஹன்சா என்டர்டெயின்மென்ட்!

விஜயதசமி நன்னாளான அக்டோபர் 20, 2026 அன்று, ஹன்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது புதிய படைப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது....

ஹைக்கூ சினிமா விமர்சனம்

ஃபீல்குட் உணர்வில் மிதக்க விரும்புகிறவர்களுக்கான அழகிய படைப்பு. ஹீரோ கல்லூரிக் காலத்தில் சக மாணவியைக் காதலிக்க, நாட்கள் உற்சாகமாக நகர்கிறது....

More like this