HomeCinemaமெகா பிரின்ஸ் வருண் தேஜ் நடிக்கும் மட்கா படத்தின் டீசர் வெளியீடு! 

மெகா பிரின்ஸ் வருண் தேஜ் நடிக்கும் மட்கா படத்தின் டீசர் வெளியீடு! 

Published on

மெகா பிரின்ஸ் வருண் தேஜ் நடிப்பில், கருணா குமார் இயக்கத்தில் மன்னனாக உயரும் ஒரு சாதாரண மனிதனின் பயணத்தை விவரிக்கும் மட்கா படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

இந்த டீஸர் கதாநாயகனின் வளர்ச்சியை அடுக்கடுக்காக எடுத்துக்காட்டுகிறது, சிறையில் இருக்கும் போது, ஜெயிலர் ஒருவரின் வார்த்தைகளால் ஈர்க்கப்படும் நாயகன், நாட்டில் 90% செல்வத்தைக் கட்டுப்படுத்தும், ஒரு சதவீத பணக்கார குழுவில் தானும் இணைய வேண்டுமெனத் தீர்மானிக்கிறார், லட்சியத்தின் பாதையில், மனித பேராசை பற்றிய புரிதலால் உந்தப்படும் நாயகன், இரக்கமற்ற உலகில் வெற்றியை அடையப் புறப்படுகிறார், செல்வத்தை தேடி அடையும் ஆசை, அவரது வளர்ச்சியை அடுத்தடுத்த கட்டத்திற்கு கூட்டிச் செல்கிறது.

படத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகக் கடினமான சவாலை எதிர்கொண்டு நடித்துள்ளார் வருண் தேஜ், இளமை முதல் முதுமை வரையிலான கதாபாத்திரத்தின் பயணத்தை வெளிப்படுத்தும் கதையில், நான்கு வித்தியாசமான மேக்ஓவர்களுடன் மாறுபட்ட தோற்றங்களில் கலக்கியுள்ளார்.

ஒவ்வொரு லுக்கிலும் அவரது உடல் மொழியும், டயலாக் டெலிவரியும், நம்மை மயக்குகிறது. அவர் தனது பதின்ம வயதிலும், இருபதுகளிலும் உள்ள இளைஞனாக தூள் கிளப்புகிறார், அதே சமயம் நடுத்தர வயதுடைய நபராக, அவர் மாறுவது நம்ப முடியாத வகையில் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. மேலும் வயதான தோற்றம் நம்மை மிரட்டுகிறது. ஒரு முக்கிய சண்டைக் காட்சியின் போது பூர்ணா தியேட்டர் மற்றும் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் கட்அவுட் உள்ளிட்டவை காட்டப்படுவது, நம் ஆவலைத் தூண்டுகிறது.

இந்த டீஸர் நோரா ஃபதேஹி, மீனாட்சி சவுத்ரி மற்றும் நவீன் சந்திரா உள்ளிட்ட நட்சத்திர துணை நடிகர்களையும் அறிமுகப்படுத்துகிறது.

கருணா குமார் முதல் முறையாக ஒரு வெகுஜன வணிக விஷயத்தை திறமையாக கையாண்டு திரையில் அசத்தலாக வெளிப்படுத்தியுள்ளார். மாஸ் பஞ்ச் மற்றும் அழுத்தமான டயலாக்குகள் அடங்கிய அவரது கதைசொல்லல் மிக வித்தியாசமானது, இயக்குனரின் பார்வை மற்றும் படக்குழுவின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பில், பழமையான காலகட்டம் தத்ரூபமாக திரையில் விரிகிறது.

இந்த டீஸர் ஒரு அற்புதமான பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் மட்கா தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியப் படமாக வரும் நவம்பர் 14-ம் தேதி வெளியாகிறது.

படக் குழு:
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கருணா குமார்
தயாரிப்பாளர்கள்: மோகன் செருகுரி, மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா
பேனர்: வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் இசை: ஜீ.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : பிரியசேத்
எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர்
தயாரிப்பு வடிவமைப்பு: ஆஷிஷ் தேஜா
கலை: சுரேஷ்
நிர்வாகத் தயாரிப்பாளர் – ஆர் கே ஜனா
மார்க்கெட்டிங் & டிஜிட்டல் – ஹேஷ்டேக் மீடியா
மக்கள் தொடர்பு – யுவராஜ்

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this