HomeCinema‘டபுள் டக்கர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா!

‘டபுள் டக்கர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா!

Published on

இந்த புத்தாண்டு தமிழ் ரசிகர்களுக்கு, ஏற்கனவே தரமான கதையம்சமுள்ள திரைப்படங்களை வழங்கி வரும் நிலையில், அந்த வரிசையில் தீரஜ் நடித்திருக்கும் ‘டபுள் டக்கர்’ படம் இணைகிறது.

இந்த படத்தை ஃபேண்டஸி அம்சங்களுடன், வயிறு வலிக்க சிரித்து மகிழும்படியான பொழுதுபோக்கு படைப்பாக அறிமுக இயக்குநர் மீரா மஹதி இயக்கியுள்ளார்.

முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா, தனது சமூக வலைத்தள பக்கத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, ஒட்டுமொத்த குழுவிற்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கதாநாயகனுடன் இரண்டு அழகான அனிமேஷன் கதாபாத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளது. அது பார்வையாளர்களுக்கு மிகப்புதுமையான சினிமா அனுபவமாக இருக்கும்.

ஸ்ம்ருதி வெங்கட் கதாநாயகியாக நடிக்க கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன்,முனிஷ்காந்த், சுனில் ரெட்டி, ஷாரா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

படத்தை ஏர் ஃபிளிக் புரொடக்சன் (Air Flick Production) தயாரிக்கிறது. படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. படம் கோடை விடுமுறையில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

வித்யாசாகர் இசையமைப்பதால் பாடல்கள் மெல்லிசை மற்றும் இளமைத் துள்ளல்களின் சரியான கலவையாக பாடல்கள் இருக்கும் என்பது உறுதியாகிறது.

கௌதம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் எடிட்டிங் பணியை வெற்றி கவனிக்கிறார். சேது ராமலிங்கம் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

Latest articles

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

More like this