Published on

தி ராயல் காலேஜ் ஆஃப் ஆப்ஸ்டட்ரிஷன் அண்ட் கைனகாலஜிஸ்ட்‘ (RCOG) என்பது உலகம் முழுவதும் உள்ள பெண்களின் உடல்நலத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்ட சர்வதேச நிறுவனம்.

யு.கே.வில் அமைந்துள்ள இந்த அமைப்புக்கு யூ.கே.வுக்கு வெளியே, மகப்பேறு மருத்துவர்கள், மகளிர் நோய் மருத்துவர்கள் என அதிக உறுப்பினர்களைக் கொண்ட நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது!

AICC ROCG இன் தெற்கு மண்டலத்து வருடாந்திர கருத்தரங்கு, RCOG தமிழ்நாடு கூட்டமைப்புடன் (ATNROCG) இணைந்து, 2024 ஜனவரி 20, 21 ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில், சென்னையிலுள்ள சீதாபதி கிளினிக் & ஹாஸ்பிட்டலின் சீனியர் OBGYN மருத்துவர் உமா ராம் அவர்களை, AICC RCOG அமைப்பின் அகில இந்தியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சீனியர் OBGYN அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் சுமனா மனோகர் தெற்கு மண்டலத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

RCOGஇன் தலைவரான மருத்துவர் Ranee Tahkkar, லண்டனில் இருந்து காணொளி வாயிலாகக் கலந்து கொண்டார்.

தேசிய சுகாதார இயக்கத்தின் தமிழ்நாட்டு திட்ட இயக்குநர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்தரங்கைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்..

பெண்கள் மற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பைக் குறித்த ஆலோசனைகளும், அதை மையப்படுத்திய உரைகளுமே கருத்தரங்கின் கருப்பொருளாக அமைந்தது.

தாய் மற்றும் சேய் இறப்பு விகிதத்தைக் குறைப்பதும், உலகளாவிய இனப்பெருக்க ஆரோக்கியத்தை உதுதி செய்தலும், கருத்தரங்கின் நிலையான வளர்ச்சி இலக்குகளாகும். நோயாளியின் பாதுகாப்பே இலக்குகளில் முதன்மையானது என்பதால், அதுவே கருத்தரங்கின் கருப்பொருளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

இந்த கருத்தரங்கில் கர்ப்பப்பை மற்றும் அதிக சிக்கலான பிரசவம் குறித்தும், வெஜினல் சொசைட்டி ஆஃப் இந்தியக் கூட்டமைப்பின் பெண் பிறப்புறுப்பு அறுவை சிகிச்சை குறித்தும் இரண்டு பயிலரங்குகள் நடந்தன.

தனியார் மருத்துவமனைகள், PCIME-ல் பதிவு செய்வதற்காக ஓர் அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான்கு சர்வதேச மற்றும் பல புகழ்மிக்க பேராசிரியர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு, பிள்ளைப்பேற்று வலி, பிரசவம், மகளிர் நல அறுவை சிகிச்சை, மற்றும் நவீன சிகிச்சை முறைகள் ஆகியவைப் பற்றி உரையாற்றினர். சமீபத்தில் ரமோன் மக்சேசே விருது பெற்ற பத்மஸ்ரீ மருத்துவர் ரவி கண்ணன் அவர்கள், புற்றுநோய் தடுப்பிற்கான சமூகப் பங்களிப்பைக் கட்டமைப்பது பற்றி உரையாற்றினார்.

Latest articles

பல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் ஹெர் (HER) பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!

Be The One Longevity Centre நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிளினிக்கல் இயக்குநரான டாக்டர் இர்ஃபானா ஹமீத், பெண்களின்...

இரா.சரவணன் இயக்கத்தில் அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2.’

‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தனது...

என்னுடைய நடிப்பை தயாரிப்பு தரப்பு சிறப்பு என பாராட்டியிருக்கிறார்கள்! -சிக்மா பட விழாவில் நடிகர் சந்தீப் கிஷன் உற்சாகம்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க, வந்தை பிரேம் இயக்கும் ‘மறுஜென்ம காதல்’ படம் பூஜையுடன் துவக்கம்!  

வந்தை பிரேம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் 'மறுஜென்ம காதல்' திரைப்படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க...

More like this