HomeCinemaபான் இந்திய படமான ‘பர்மா'வில் ஹீரோவாக அறிமுகமாகும் தொலைக்காட்சி பிரபலம் ரக்‌ஷ் ராம்! அக்டோபரில் தொடங்குது...

பான் இந்திய படமான ‘பர்மா’வில் ஹீரோவாக அறிமுகமாகும் தொலைக்காட்சி பிரபலம் ரக்‌ஷ் ராம்! அக்டோபரில் தொடங்குது படப்பிடிப்பு.

Published on

நடிகர் ரக்‌ஷ் ராம் ‘கட்டிமேலா’, ‘புட்டகௌரி மதுவே’ போன்ற வெற்றிகரமான டிவி நிகழ்ச்சிகளில் தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் மக்களின் இதயங்களை வென்ற அபார திறமையாளர். அவர் இப்போது அட்டகாசமான ஆக்‌ஷன் திரில்லர் சப்ஜெக்டில் உருவாகும் ‘பர்மா’  படம் மூலம்  முதன்முறையாக திரைப்பட நடிகராக அறிமுகமாகிறார்.

படத்தில் பெருமைமிக்க ஆளுமைகளான ஆதித்யா மேனன் மற்றும் தீபக் ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர்.

‘பஹதூர்’, ‘பர்ஜரி’, ‘பாரதே’ மற்றும் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசிப் படமான ‘ஜேம்ஸ்’ போன்ற வணிக ரீதியான பிளாக் பஸ்டர்களை வழங்கிய இயக்குநர் சேத்தன் குமார் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தின் துவக்க விழா பசவங்குடி தொட்ட கணபதி கோவிலில் பிரமாண்டமாக நடந்தது. விழாவில் அஷ்வினி புனித் ராஜ்குமார் கிளாப் அடிக்க, ராகவேந்திரா ராஜ்குமார் கேமராவை இயக்கி படத்தை துவக்கி வைத்தனர். ஆக்‌ஷன் பிரின்ஸ் துருவா சர்ஜா முதல் ஷாட்டை எடுக்க படப்பிடிப்பு பிரமாண்டமாக துவங்கியது.

இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் பான் இந்திய படமாக உருவாகி கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும்.

அக்டோபரில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் தெரியவரும்.

படக்குழு:-
தயாரிப்பு: ஸ்ரீ சாய் ஆஞ்சநேயா நிறுவனம்
இயக்குநர்: சேத்தன் குமார்
இசை: வி.ஹரிகிருஷ்ணா
சண்டைக் காட்சிகள்: டாக்டர் கே ரவிவர்மா
ஒளிப்பதிவு : சங்கேத் MYS
எடிட்டர்: மகேஷ் ரெட்டி
ஆடைகள்: நாகலக்ஷ்மன் பாபு, நம்ரதா கவுடா
நடனம்: பஜரங்கி மோகன்
கலை இயக்குநர்: ரகில்
எஃபெக்ட்ஸ் : ராஜன்
ஸ்டில்ஸ்: மிருணாள் எஸ் காஷ்யப்
போஸ்டர்: அஸ்வின் ரமேஷ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Latest articles

இளைய திலகம் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கும் அழகிய லைலா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது! 

ஏ.ஆர்.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோ சார்பில் ஏ.ஆர்.மதியழகன், ஆரத்தி இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் 'அழகிய லைலா.' இளைய திலகம்...

’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

சினிமா மற்றும் கொண்டாட்டங்களைத் தாண்டி ரசிகர்கள் இயக்கத்தை சமூக நலனுக்கான முயற்சியாக மாற்றும் வகையில், ’ஐகான் ஸ்டார்’ அல்லு...

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது!

ஸ்மார்ட்டான உள்ளடக்கத் தேடலுடன், மேலும் வளமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில், Zee 5 தனது மறுவடிவமைக்கப்பட்ட தயாரிப்பு...

விநோத உலகத்தை  அறிமுகப்படுத்தும் ‘ட்ரோன்ஸ்’ படத்தின் மிரட்டலான 3 ஃபர்ஸ்ட் லுக், குவியும் வரவேற்பு!

GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ஆர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட்...

More like this