HomeGeneralபிரபல இயக்குநர்கள் வெளியிட்ட, உலகத் தரத்தில் உருவான ஹோப் 30 நிமிட குறும்படம்!

பிரபல இயக்குநர்கள் வெளியிட்ட, உலகத் தரத்தில் உருவான ஹோப் 30 நிமிட குறும்படம்!

Published on

 

முதல் பார்வை மற்றும் டிரெய்லரை இயக்குநர் வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், சசிகுமார், சமுத்திரக்கனி, நித்திலன் சாமிநாதன், ஶ்ரீகணேஷ் உள்ளிட்ட முக்கிய திரையுலக பிரபலங்கள் வெளியிட்டனர்
ராமு கண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் அபிநயா, சுரேஷ் கண்ணன், ராஜேஸ்வரி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்
டிரைபாட் டிராவல் மற்றும் டி ஹெச் எஃப் ஃபிலிம் கார்ப்பொரேஷன் பேனர்களில் ராமு கண்ணன் மற்றும் தேவகி நித்யானந்தம் தயாரிப்பில் ராமு கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படம் ‘ஹோப்’.
படைப்பாக்கத்தில் எந்த சமரசமும் இல்லாமல் ஒரு திரைப்படத்திற்கு உரித்தான பட்ஜெட்டில் உலகத்தரத்தில் உருவாகியுள்ள ‘ஹோப்’ படத்தில் ‘நாடோடிகள்’ புகழ் அபிநயா ஆனந்த், சுரேஷ் கண்ணன் மற்றும் ராஜேஸ்வரி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
‘ஹோப்’ முதல் பார்வை மற்றும் டிரெய்லரை கடந்த ஞாயிறு (06.09.2026) அன்று காலை இயக்குநர் வெங்கட் பிரபு, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர்-நடிகர் சசிகுமார்,இயக்குநர்-நடிகர் சமுத்திரக்கனி,  இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ், இயக்குநர் நித்திலன் சாமிநாதன், ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன், படத்தொகுப்பாளர் பிரவீன் கே எல், பிரதீப் ஈ. ராகவ், கமலா திரையரங்க நிர்வாக இயக்குநர் விஷ்ணு கமல் மற்றும் திரைப்பட மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் வெளியிட்டனர்.
‘ஹோப்’ படத்திற்கு தமிழில் முதன்முறையாக 2022ல் தேசிய விருது வென்ற “சவுதி வேலக்கா” திரைப்படத்திற்கு இசையமைத்த பிரபல மலையாள இசையமைப்பாளர் பாலி பிரான்சிஸ் இசையமைக்க, கோபி துரைசாமி ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். ஒலி வடிவமைப்பை 2023ல் தேசிய விருது வென்ற சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் எம் ஆகியோரும் ஒலிக்கோர்வையை அரவிந்த் மேனனும் செய்துள்ளனர். படத்தொகுப்பு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பையும் இயக்குநர் ராமு கண்ணனே கையாண்டுள்ளார்.
‘ஹோப்’ குறித்து பேசிய இயக்குநர் ராமு கண்ணன், “வாழ்க்கையில் முக்கியமான தருணங்களில் நமக்கு உண்டாகும் எதிர்மறை எண்ணங்களை நம்பிக்கையுடன் கையாள்வது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த படைப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளோம். இக்குறும்படத்தை ஒரு முழு நீள திரைப்படமாக உருவாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளோம். திரில்லர், நகைச்சுவை, ஆக்ஷன் என இன்னும் மூன்று கதைகளை சேர்த்து ஆந்தாலஜி பாணியில் இதை உருவாக்கவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். தலைப்புக்கு ஏற்ற வகையில் அனைத்து கதைகளின் மைய நோக்கமாக நம்பிக்கையே இருக்கும்,” என்றார்.
இந்த 30 நிமிட குறும்படம் ஏற்கனவே சிம்லா மற்றும் கல்கத்தாவில் நடைபெறும் திரைப்பட விழாக்களுக்கு தேர்வாகியுள்ளது கூடுதல் சிறப்பு. மேலும் வரவிருக்கும் இந்திய மற்றும் சர்வதேச  திரைப்பட விழாக்களின் அறிவுப்புகளுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் முன்னோட்டத்தினை சென்னை கமலா திரையரங்கில் நேற்று (06.09.2026) முதல் அனைத்து திரைப்படங்களின் இடைவெளியிலும் காணலாம்.
‘ஹோப்’ மீதும் தன் மீதும் நம்பிக்கை வைத்து முதல் பார்வையையும் டிரெய்லரையும் வெளியிட்ட திரையுலக பிரபலங்களுக்கு இயக்குநர் ராமு கண்ணன் நம்பிக்கை கலந்த நன்றி தெரிவித்தார்.

 

Latest articles

என்னுடைய நடிப்பை தயாரிப்பு தரப்பு சிறப்பு என பாராட்டியிருக்கிறார்கள்! -சிக்மா பட விழாவில் நடிகர் சந்தீப் கிஷன் உற்சாகம்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க, வந்தை பிரேம் இயக்கும் ‘மறுஜென்ம காதல்’ படம் பூஜையுடன் துவக்கம்!  

வந்தை பிரேம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் 'மறுஜென்ம காதல்' திரைப்படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க...

பீப் சினிமா விமர்சனம்

புத்திசாலித்தனமான கதைப்பின்னலில் 'பீப்.' ஹீரோ ராகவ்க்கு புகைப்படங்களை வைத்து, அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்து...

டோரதி’யின் உலகையும் இளையராஜாவின் இசையையும் தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்க ஸ்பெஷல் லாரி ரோடு ட்ரிப்! 

 ’டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாவதை முன்னிட்டு, இளையராஜாவின் இசையுடன் தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும்...

More like this

என்னுடைய நடிப்பை தயாரிப்பு தரப்பு சிறப்பு என பாராட்டியிருக்கிறார்கள்! -சிக்மா பட விழாவில் நடிகர் சந்தீப் கிஷன் உற்சாகம்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க, வந்தை பிரேம் இயக்கும் ‘மறுஜென்ம காதல்’ படம் பூஜையுடன் துவக்கம்!  

வந்தை பிரேம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் 'மறுஜென்ம காதல்' திரைப்படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க...

பீப் சினிமா விமர்சனம்

புத்திசாலித்தனமான கதைப்பின்னலில் 'பீப்.' ஹீரோ ராகவ்க்கு புகைப்படங்களை வைத்து, அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்து...