Published on

சென்னை அருகே செயல்பட்டு வரும் மெட்ராஸ் முதலை வங்கி (Madras Crocodile Bank) தனது பயணத்தின் முக்கிய மைல்கல்லாக, இன்று (ஆகஸ்ட் 28, 2026) 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், ஊடக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மெட்ராஸ் முதலை வங்கி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த 49 ஆண்டுகளாக ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் பணியில் மெட்ராஸ் முதலை வங்கி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், நிறுவனத்தின் நிறுவனர்களான பத்மஸ்ரீ ரோமுலஸ் விட்டேக்கர் மற்றும் சாய் விட்டேக்கர் ஆகியோருக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. மேலும், 50-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மூன்று முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.
அதன்படி, ஆகஸ்ட் 2026 முதல் ஆகஸ்ட் 2027 வரை, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன்கிழமை மெட்ராஸ் முதலை வங்கிக்கு வருகை தரும் அனைத்து பார்வையாளர்களுக்கும் இலவச அனுமதி வழங்கப்படவுள்ளது. இதேபோல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சார்பில் குழுவாக வருகை தரும் மாணவர்களுக்கு சிறப்பு கட்டணச் சலுகைகளும் வழங்கப்படவுள்ளன.
இதனுடன், இந்தியாவிலேயே முதல்முறையாக ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு குறித்து நாடு தழுவிய மிகப்பெரிய விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மெட்ராஸ் முதலை வங்கி அறிவித்துள்ளது. மெட்ராஸ் முதலை வங்கி மற்றும் The Reptile Conservancy Alliance இணைந்து ‘Save The Reptiles’ என்ற பெயரில் இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுக்க உள்ளன.
இன்று தொடங்கும் இந்த விழிப்புணர்வு பயணம் டிசம்பர் 2026 வரை சுமார் 120 நாட்கள் நடைபெற உள்ளது. இந்தப் பயணத்தில் 22 மாநிலங்கள் வழியாக சுமார் 15,000 கிலோமீட்டர் தூரம் கடக்கப்படவுள்ளது.
பயணத்தின் போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மாநில வனத்துறை அதிகாரிகள், வன உயிரின ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்து, ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், ‘Save The Reptiles’ நாடு தழுவிய விழிப்புணர்வு பயணத்தை ஊடகங்கள் முன்னிலையில் தொடங்குவதில் மெட்ராஸ் முதலை வங்கி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
இந்தப் பிரச்சாரம் நாடு முழுவதும் மக்களிடம் சென்றடையவும், ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கவும் ஊடக நண்பர்கள் தொடர்ந்து தங்களது ஆதரவை வழங்க வேண்டும் என்றும் நிகழ்ச்சியில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
49 ஆண்டுகால அர்ப்பணிப்பான பயணத்தை நிறைவு செய்து 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மெட்ராஸ் முதலை வங்கி, ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பில் தனது அடுத்த அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ‘Save The Reptiles’ மூலம் நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் மிகப்பெரிய பயணத்தையும் முன்னெடுக்கிறது.

Latest articles

‘ஒன்ஸ் மோர்’ சினிமா விமர்சனம்

தன்னை உயிருக்குயிராக காதலித்தவள் தன்னை ஏன் பிரிந்தாள் என்பது புரியாமல் எட்டு வருட காலமாக வேதனையில் நாட்களைக் கடத்திக்...

ஒரிஜினல் மான்ஸ்டர்: மும்பையில் நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்வில் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=bfrZLRxsink மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர், ஆகஸ்ட் 28 அன்று...

அருள்நிதி – அமீர் நடிப்பில் ‘வேட்ட சாமி’ ஃபர்ஸ்ட் லுக் & கிளிம்ப்ஸ் வெளியீடு!

அருள்நிதி, அமீர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான ‘வேட்ட சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ்...

‘மீசைய முறுக்கு 2’ படத்திலிருந்து ‘கலைவாணியே’ 5வது சிங்கிள் வெளியீடு 

https://www.youtube.com/watch?v=-9ipZSzGZf0 ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கம், நடிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் இசைக்கு ரசிகர்கள்...

More like this

‘ஒன்ஸ் மோர்’ சினிமா விமர்சனம்

தன்னை உயிருக்குயிராக காதலித்தவள் தன்னை ஏன் பிரிந்தாள் என்பது புரியாமல் எட்டு வருட காலமாக வேதனையில் நாட்களைக் கடத்திக்...

ஒரிஜினல் மான்ஸ்டர்: மும்பையில் நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்வில் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=bfrZLRxsink மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர், ஆகஸ்ட் 28 அன்று...

அருள்நிதி – அமீர் நடிப்பில் ‘வேட்ட சாமி’ ஃபர்ஸ்ட் லுக் & கிளிம்ப்ஸ் வெளியீடு!

அருள்நிதி, அமீர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான ‘வேட்ட சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ்...