இளம் தலைமுறையின் கனவுகள், முயற்சி மற்றும் வெற்றியை மையமாக கொண்டு உருவாகும் ‘பீட்சா பாய்ஸ்’ திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.
சேகர் கேஷவ் சிர்ரின் இயக்கி இசையமைக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக சிவம் சங்கர், கதாநாயகியாக நேகா நடிக்கின்றனர்.
பீட்சா ரெஸ்டாரண்டில் பணிபுரியும் ஐந்து இளைஞர்கள், புதிய பீட்சா ஐடியாவை உருவாக்கி அதில் வெற்றி பெற போராடுவதுதான் படத்தின் மையக்கரு. அவர்கள் சந்திக்கும் சவால்கள், அதனை எதிர்கொண்டு வெற்றி பெறும் பயணம் ஆகியவை காமெடி, செண்டிமெண்ட் மற்றும் ஆக்சன் அம்சங்களுடன் கூடிய முழுமையான கமர்ஷியல் படமாக உருவாகிறது.
ஜிம்மி கலி, சிவா, காக்கா முட்டை ரமேஷ், அருள், சோப்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சரத் லோகிதஸ்வா வில்லனாக நடிக்கிறார்.
SEVEN HILLSS CINE CREATIONS நிறுவனத்தின் சார்பில் ஷங்கர் கே என் மற்றும் சஹானா ஷங்கர் இணைந்து தயாரிக்க ஒளிப்பதிவை குரு பிரசாத் மேற்கொள்ள, முதன்மை இணை இயக்குனர் ஆர் எல் ஜெகதீசன், படத்தொகுப்பை கணேஷ் குமார். டி கவனிக்கிறார். கலை இயக்கத்தை கணேஷ் மேற்கொள்கிறார். உடைவடிவமைப்பை வினோத் கவனிக்க, புரொடக்ஷன் டிசைனராக சதீஷ் பிரம்மாவர் பணியாற்றுகிறார்.
ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி, பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது.

