Published on

சென்னையைச் சேர்ந்த 4 வயது சிறுவன் எம் ஹம்தான் ஃபஸா (M.Hamdam Fazza) 8 கி மீ தூரத்தை 1 மணி நேரம் 4 நிமிடங்களில் துளியும் ஓய்வின்றி தொடர்ச்சியாக ஸ்கேட்டிங் மூலம் கடந்து உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறார்.
போதையில்லா உலகை உருவாக்குவோம் (SAY NO TO DRUG) என்பதை நோக்கமாக கொண்டு, சமூக விழிப்புணர்வு பிரச்சாரமாக பிப்ரவரி 14; 2026 அன்று சென்னை மெரீனா கடற்கரை செல்ஃபி பாயிண்ட்டில் நடந்த நிகழ்வில் மேற்குறிப்பிட்ட சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த சாதனை ’இந்தியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்’ (INDIA BOOK OF WORLD RECORDS) பட்டியலில் இடம்பிடித்தது.
அதையடுத்து சாதனை நிகழ்த்திய சிறுவனுக்கு அங்கீகார சான்றிதழை வழங்கிய ’இந்தியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்’ அமைப்பின் எம் டி சதாம் ஹுசேன், சாதனை சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்து அவருக்கு பயிற்சியளித்து வரும் BLACK TIGER Roller Skating Academy’யின் நிறுவனர் டோனா சதீஷையும், ஊக்கப்படுத்தும் சிறுவனின் பெற்றோரையும் பாராட்டினார். ”உலக வரலாற்றில் இத்தனை சிறுவயதில் இதுபோன்ற சாதனையை யாரும் செய்ததில்லை” என குறிப்பிட்ட அவர் ”இப்படியான சாதனையாளர்களை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும், சாதனையாளர்கள் உருவாக தேவையான வசதிகளை உருவாக்கிக்  கொடுக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
இரண்டு வருடங்கள் முன் இதே BLACK TIGER Roller Skating Academy’யில் பயிற்சி பெற்றவரான ஏ.ஜே.ரபியா சக்கியா தனிநபர் ஸ்கேட்டிங் விளையாட்டில் 44 கி.மீ தூரத்தை 1 மணி நேரம் 48 நிமிடங்களுக்குள் கடந்து புதிய உலக சாதனை படைத்திருந்தார். அவர் இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டு சிறுவன் ஹம்தான் ஃபஸாவை ஊக்குவித்தார்.
”எங்கள் பயிற்சி நிறுவனம் இரு உலக சாதனையாளர்களை உருவாக்கியுள்ளது. எங்களிடம் பயிற்சி பெற்று வருகிற மற்றவர்களும் அடுத்தடுத்து உலக சாதனை பட்டியலில் இணைவார்கள்” என்றார் BLACK TIGER Roller Skating Academy’யின் நிறுவனர் டோனா சதீஷ்.
நிகழ்வில், ஸ்கேட்டிங் விளையாட்டில் வெவ்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் சாதனைச் சிறுவனின் பெற்றோர், சிறுவன் படிக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் சுகந்தி, உதவி பயிற்சியாளர் தனுஷ் உள்ளிடோர் கலந்து கொண்டனர். நிகழ்வை பலகுரல் கலைஞரும், நடிகருமான விஜய் டிவி மோசஸ் தொகுத்து வழங்கினார்.
குழந்தைப் பருவத்திலேயே மாபெரும் உலக சாதனை படைத்த சிறுவனுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிகிறது.

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this