Friday, December 26, 2025
spot_img

Published on

இளைஞன் காளி தன் காதலியின் பணத்தாசையை நிறைவேற்ற, தனது ஜெராக்ஸ் போலிருக்கிற உபேந்திரா என்ற பணக்காரனைக் கொலை செய்கிறான். கொலை செய்தபிறகு ஆள் மாறாட்டம் செய்து உபேந்திராவுக்கு சொந்தமான கோடிக்கணக்கான பணத்தை அபகரிப்பது காளியின் திட்டம். அதற்கான நடவடிக்கைகளில் இறங்கும்போது உபேந்திராவே ஒரு கொலைக் குற்றவாளி என்பதும், அவன் தன்னைத் தன்னை தீர்த்துக் கட்ட திட்டமிட்டிருந்ததும் காளிக்கு தெரியவருகிறது.

காளி தன் காதலியுடன் சேர்ந்து உபேந்திராவை கொலை செய்து, ஆள் மாறாட்டம் செய்ய திட்டமிடும்போது நிமிர்ந்து உட்காரும் நாம், உபேந்திரா பற்றிய அதிர வைக்கும் உண்மைகள் தெரியும்போது, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் சீட்டின் நுனிக்கு போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

காளியின் திட்டம் நிறைவேறியதா? காதலியை திருப்திபடுத்த முடிந்ததா? உபேந்திரா காளியை போட்டுத்தள்ள திட்டமிட்டிருந்தது எதற்காக? என்பதையெல்லாம் பரபரப்பாக காண்பித்து நிறைவுக்கு வருகிறது கிரிஷ் திருக்குமரன் இயக்கியிருக்கும் ‘ரெட்ட தல.’

ஸ்டைலிஷ் லுக்கில் காளியாகவும் உபேந்திராவாகவும் அருண் விஜய். ஹீரோயிஸத்தையும் வில்லனிசத்தையும் கலந்துகட்டி மிரட்டலான கேங்ஸ்டர், டெரரான கேங்ஸ்டர் என ஆக்சன் அதிரடியில் வித்தியாசம் காட்டி தெறிக்கவிடுகிறார்.

சித்தி இத்னானி தன் காதலன் காளியிடம் ‘என்கூட காலம் முழுக்க இருக்கணும்னு ஆசைப்படுறேல்ல; அது நடக்கணும்னா நான் எதிர்பார்க்கிற அளவுக்கு பணத்தை கொண்டு வா; அதன்பிறகு என்னை கல்யாணம் பண்ணிக்கிறது பத்தி யோசிக்கலாம்’ என்பதுபோல் டயலாக் விடுகிறார். அப்போதே அவர் இந்த கதையின் ஹீரோயின் அல்ல; வில்லி என்றாகி விடுகிறது. கிளைமாக்ஸிலாவது அவர் ஹீரோயினாகி விடுவார் என எதிர்பார்த்தால் ம்ஹூம்…

ஜான் விஜய்க்கு வழக்கம்போல மோசமான போலீஸ் கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்க, அவரும் வழக்கம்போலவே வளைந்து நெளிந்து நடந்து திமிர் தெனாவட்டு காட்டுகிறார்.

ஹரீஷ் பேரடி, யோகேஷ், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கேங்ஸ்டர் கும்பலாக கூடி, பழிவாங்கும் வெறியோடு அங்குமிங்கும் பாய்கிறார்கள். ஒருசில காட்சிகளில் வந்துபோகிறார் பாலாஜி முருகதாஸ்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அவனைப் பற்றிய அதிர்ச்சியான பல தகவல்கள் கிடைக்கின்றன.

 

 

தெரிகிறது.

கோவாவில் கொலையெல்லாம் செய்து கொண்டிருந்த

பெரிய கேங்ஸ்டர் என்பது தெரியவருகிறது.

 

Latest articles

ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷன் – லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் கூட்டணியில் உருவாகும் ‘சிக்மா’ திரைப்பட டீசர் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்தது!

  லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் 'சிக்மா' திரைப்படத்தில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக, நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக...

ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ படத்தின் டீசர் வெளியானது! .

ராதிகா நடித்துள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தரமான கதைகளை தேர்ந்தெடுத்து, திறமையாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வரும் சிவகார்த்திகேயன்...

விஜய் சேதுபதியின் டிரைன் படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் பாடியுள்ள ‘கன்னக்குழிக்காரா’ பாடல் வெளியானது!

விஜய் சேதுபதி நடிக்கும் டிரைன் படத்திற்காக ஸ்ருதிஹாசன் பாடியுள்ள 'கன்னக்குழிக்காரா' பாடல், தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும்...

More like this

ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷன் – லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் கூட்டணியில் உருவாகும் ‘சிக்மா’ திரைப்பட டீசர் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்தது!

  லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் 'சிக்மா' திரைப்படத்தில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக, நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக...

ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ படத்தின் டீசர் வெளியானது! .

ராதிகா நடித்துள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தரமான கதைகளை தேர்ந்தெடுத்து, திறமையாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வரும் சிவகார்த்திகேயன்...
error: Content is protected !!