Published on

விஷால் நடிப்பில் மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் மாபெறும் வரவேற்பு பெற்று மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் நடிக்கும் 35 வது படமாக இத்திரைப்படம் தயாரகிரது.

மேலும் இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி அவர்கள் தயாரிப்பில் உறுவாக உள்ளது. சௌத்ரி 1990-ம் வருடம் புது வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் சூப்பர்குட் பிலிம்ஸ் என்ற நிறுவனம் துவங்கி தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தது மட்டுமில்லாமல் பல புதுமுக இயக்குநர்களை அறிமுகம் செய்த பெருமை இந்த நிறுவனம் பெற்றுள்ளது.

இத்திரைப்படம் ஆர் பி செளத்ரி அவர்களின் தயாரிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது திரைப்படமாக உருவாக உள்ளது. இயக்குனர் ரவி அரசு இயக்கும் இந்தப் படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். முதல்முறையாக நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் ரவி அரசு கூட்டணியில் இந்த திரைப்படம் உருவாக இருக்கிறது.

மதகஜராஜாவின் மாபெறும் வெற்றி கூட்டணிக்கு பிறகு மீண்டும் நடிகர் விஷால் மற்றும் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் இனைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தொகுப்பை என் பி ஶ்ரீகாந்த் கவனிக்க துரைராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். மார்க் ஆண்டனி வெற்றியை தொடர்ந்து மீண்டும் நடிகர் விஷால் உடன் இணைகிறார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.

விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இதில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பூஜை இன்று காலை மிகப் சிறப்பாக சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் நடைப்பெற்றது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முதற்கட்டமாக
45 நாட்கள் நடைபெற உள்ளது. இவர்களது கூட்டணியில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷால்35 சூப்பர்குட் பிலிம்ஸ்99 என்ற படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் கார்த்தி, தம்பி ராமையா, அர்ஜெய், இயக்குனர் வெற்றிமாறன், மணிமாறன், சரவண சுப்பையா, எம் சரவணன், மோகன், விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம், ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ வில்சன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .

Latest articles

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

மணிரத்னம் சார் பள்ளியில் கற்ற அனுபவங்கள் இந்தப் படத்தை உருவாக்க மிகவும் உதவியாக இருந்தது! -‘அன்பே டயானா’ பட விழாவில் இயக்குநர் பாரி இளவழகன் 

ஜமா பட இயக்குநர் பாரி இளவழகன் நடித்துள்ள ‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் மற்றும்...

I, Nobody சினிமா விமர்சனம்

'கெட்டியோலானு என்டே மாலாக்கா', 'ரோஷாக்' ஆகிய படங்களை இயக்கிய நிசாம் பஷீர் இயக்கியுள்ள படம். வங்கி கொள்ளை என்ற...

புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிரம்பிய துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது…...

More like this