HomeUncategorizedராக்கிங் ஸ்டார் யாஷின் தாயார் தயாரிக்கும் முதல் படம் 'கொத்தாலவாடி'யின் டீசர் வெளியானது! 

ராக்கிங் ஸ்டார் யாஷின் தாயார் தயாரிக்கும் முதல் படம் ‘கொத்தாலவாடி’யின் டீசர் வெளியானது! 

Published on

ராக்கிங் ஸ்டார் யாஷின் தாயார் புஷ்பா அருண்குமார் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். பி.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் அவர் தயாரிக்கும் முதல் திரைப்படத்திற்கு ‘கொத்தாலவாடி’ என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் குறிக்கோளுடன் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

நடிகர் டாக்டர் ராஜ்குமாரின் மனைவி பரவதம்மா ராஜ்குமார் போன்று புஷ்பா அருண்குமார் இளம் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளார். தற்போது கன்னட திரையுலகில் பயணத்தை தொடங்கியுள்ள பி.ஏ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

கொத்தாலவாடி’யில் பிருத்வி அம்பார் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காவ்யா ஷைவா நடித்துள்ளார். ஶ்ரீராஜ் எழுதி, இயக்குகிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு, படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்திருந்தது.

இந்த நிலையில்,கொத்தாலவாடி உலகினை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில் படத்தின் டீசர் உருவாக்கப்பட்டு வெளியாகியிருக்கிறது. மாஸ் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த டீசரில் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளர் கார்த்திக்கின் விஷூவல்கள் ஆழமாகவும், உணர்வுப்பூர்வமான பின்னணியை பிரதிபலிக்கின்றன.

அபினந்தன் காஷ்யப்பின் பின்னணி இசை காட்சிகளுடன் ஒன்றியிருந்தது. பிருத்வி அம்பார் ரக்கட் தோற்றத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 90 நொடிகள் ஓடும் டீசர் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. மேலும், இயக்குநர் சிராஜ் மிகவும் உறுதியான கதையுடன் வருவதை டீசரிலேயே உறுதிப்படுத்தி இருக்கிறார்.

படத்தின் தலைப்பான கொத்தாலவாடி கர்நாடக மாநிலத்தின் குண்ட்லுப்பெட் தாலுக்காவில் உள்ள கிராமத்தை தழுவி சூட்டப்பட்டுள்ளது. இந்த கிராமத்திலேயே படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படத்தின் கதையோடு ஒன்றியிருக்கவே படப்பிடிப்பு இந்த கிராமத்தில் நடந்ததாக படக்குழு தெரிவித்தது.

இப்படத்தில் கோபால் தேஷ்பாண்டே, ராஜேஷ் நடரங்கா, அவினாஷ், காவ்யா ஷைவா, மன்சி சுதிர், ரகு ரமனகோப்பா மற்றும் சேத்தன் காந்தரவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் பி.ஏ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இசை பிரிவில் இரு புதிய கலைஞர்களை அறிமுகம் செய்துள்ளது. விகாஷ் வசிஷ்தா படத்தின் பாடல் ஒன்றுக்கு இசையமைத்துள்ள நிலையில், அபினந்தன் காஷ்யப் பின்னணி இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில், மூர்கத்தனமான, சென்டிமென்ட் மற்றும் கமர்ஷியல் அம்சங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ரகு நீனந்தல்லி படத்திற்கு வசனம் எழுத, படத்தொகுப்பு பணிகளை ராமிஷெட்டி பவன் மேற்கொண்டுள்ளார். தினேஷ் அசோக் படத்தின் போஸ்டர்களை வடிவமைத்துள்ளார்.

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this