HomeCinemaமண் மீது சொர்க்கமாக உருவாகி வரும் 'பூங்கா.' நல்ல கருத்துக்களுடன் இயக்குகிறார் கே பி தனசேகர்.

மண் மீது சொர்க்கமாக உருவாகி வரும் ‘பூங்கா.’ நல்ல கருத்துக்களுடன் இயக்குகிறார் கே பி தனசேகர்.

Published on

அழகு மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, கே பி தனசேகர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் பூங்கா.’

இந்த படத்தில் கௌசிக் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக ஆரா நடிக்கிறார். சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”’பூங்கா’ என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது என்பார்கள், பூங்காவை மண்மீது உள்ள சொர்க்கம் என்று சொல்லலாம். அத்தகைய பூங்காவுக்கு நாலு பசங்க பிரச்சனைகளோடு நுழைகிறார்கள். அங்கு அவர்களின் பிரச்சனை தீர்ந்ததா என்பதுதான் கதை” என்றார்.

நட்டி, பூனம் பஜ்வா, ராம்கி, ரவி மரியா ஆகியோர் நடிப்பில் ‘குருமூர்த்தி’ என்ற படத்தை இயக்கியவர் கே.பி.தனசேகர். அந்த படத்தை வருமான வரி கட்டாத பணம், நமக்கு சொந்தமில்லை என்பதை மையமாக வைத்து விறுவிறுப்பாக இயக்கியிருந்தார். படம் விமர்சனங்களில் பேசப்பட்டது. அவர் இயக்கும் இந்த இரண்டாவது படம் நல்ல கருத்துக்களுடன் மண் மீது சொர்க்கமாக உருவாகி வருகிறது.

படக்குழு:-

ஒளிப்பதிவு R.H.அசோக், இசை அகமது விக்கி, எடிட்டிங் முகன் வேல், கலை குணசேகர், சண்டை பயிற்சி S.R.ஹரி முருகன், நடனம் சுரேஷ் சித், PRO கோவிந்தராஜ். தயாரிப்பு K.P.தனசேகர், பூங்கா R.ராமு லட்சுமி, கீதாஞ்சலி லெனினிய செல்வன் மூவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

Latest articles

கோகினூர் வைரத்தின் வரலாற்றுப் பதிவுகளை வைத்து உருவான கோகினூர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! படத்தொகுப்பு, பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் விறுவிறுப்பு.

எஸ்.பி.ஜி சினிமாஸ் சார்பில் ராஜம் இ.கஜேந்திரா தயாரித்து இயக்கியுள்ள படம் 'கோகினூர்.' படத்தின் கதை வைரங்களின் ராணியாக திகழும் கோகினூர்...

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், டிஜிட்டல் திரை நட்சத்திரமும், 'டிராகன்'...

கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=65mrBBZbSbo கார்த்தி கதாநாயகனாக, இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும்...

பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்த க்ரைம் டிராமா ‘பீப்’ செப்டம்பரில் ரிலீஸ்!

‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இல.சண்முகசுந்தர் கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘பீப்.’ எம் குவெஸ்ட்...

More like this