Sunday, March 15, 2026
spot_img
HomeCinemaஎல்லா படத்திற்கும் ஒரே உழைப்புதான்; பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் போல் நாம் கண்ட வெற்றியைத் தாண்டத் தான்...

எல்லா படத்திற்கும் ஒரே உழைப்புதான்; பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் போல் நாம் கண்ட வெற்றியைத் தாண்டத் தான் உழைக்கிறோம்! -‘திரு.மாணிக்கம்’ படத்தின் முன் வெளியீட்டு விழாவில் நடிகர் சமுத்திரகனி 

Published on

நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரகனி நடிப்பில் ‘எளிய மனிதர்களின் வாழ்வே அறம்’ என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள ‘திரு.மாணிக்கம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது.

முன்னதாக கடந்த டிசம்பர் 17 அன்று படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் நந்தா பெரியசாமி, ”இந்த திருமாணிக்கம் ஊர் கூடி இழுத்த தேர். இங்கு உள்ள எல்லோரும் இப்படத்திற்காக உழைத்துள்ளார்கள். இந்தக்கதையை முதன்முதலில் திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸிடம் தான் சொன்னேன் அவர் முதன் முதலில் பாராட்டிய கதை இது தான். லிங்குசாமி முதல் எல்லோரும் கேட்டுவிட்டு இது படமாக்கப்பட வேண்டிய கதை என்று ஊக்கம் தந்தார்கள். ரவிக்குமார் சார் இந்தக்கதை கேட்டு ஆரம்பித்தார்.

சமுத்திரகனி அண்ணன் கதை கேட்டு உடனே ஷூட்டிங் போகலாம் என என்னை நம்பி வந்தார். அவரால் தான் இந்தப்படம் உருவாகியது. அமீர் அண்ணன் எனக்குப் படம் காட்டுங்கள் என்றார் அவர் படம் பார்த்துப் பாராட்டியது பெருமை. பாராதிராஜா ஐயாவை நான் இயக்கியது எனக்குப் பெருமை. சொன்ன கதையைப் படம்பிடித்துத் தந்த சுகுமாருக்கு நன்றி. உயிர் கொடுத்த விஷால் சந்திரசேகருக்கு நன்றி. பாடலாசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. ரவிக்குமார் சார், ராஜா செந்தில் இப்படத்தைத் தைரியமாக எடுத்ததற்கு நன்றி. ஒரு நல்ல தமிழ்ப்படத்தை எடுத்திருக்கிறார் ரவிக்குமார் சார்” என்றார்.

நடிகர் சமுத்திரகனி, ”மிக மகிழ்ச்சியான தருணம். தனித்தனியாக எல்லாம் படத்திற்காக உழைப்பதில்லை, எல்லா படத்திற்கும் ஒரே உழைப்பு தான். எல்லோரும் வெற்றிக்காகத் தான் உழைக்கிறோம். பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் போல் நாம் கண்ட வெற்றியைத் தாண்டத் தான் உழைக்கிறோம்.

அப்பாவுக்குப் பிறகு ஏழு வருடங்கள் கழித்து இந்தப்படம் கிடைத்துள்ளது. இந்தப்படத்தில் நல்ல மனதுக்காரர்கள் இணைந்தார்கள். சில படங்களுக்கு மட்டும்தான் எல்லாம் தானாக அமையும். நந்தா கதை சொன்ன போது அய்யா பாரதிராஜாவிடம் போய் சொல் அவர் ஓகே சொன்னால் ஆரம்பித்து விடலாம் என்றேன். அவர் கதை கேட்டு உடனே ஓகே சொன்னார், அப்புறம் ஒவ்வொருத்தராக வந்தார்கள். தயாரிப்பாளர் மிக இனிமையானவர் எப்போதும் சிரித்த முகமாக இருப்பார். நல்ல கதையைப் படமாக்குகிறோம் என்பது மட்டும்தான் அவர் மனதிலிருந்தது.

இயல்பாக இருப்பது தான் நேர்மை, எனக்கும் அமீர் அண்ணனுக்குமான உறவும் கூட, அப்படித்தான் ஆரம்பித்தது. சசியுடனும் அப்படித்தான் ஆரம்பித்தது. உண்மை தான் நேர்மை. நேர்மை என்பது தான் இயல்பு. முன்பெல்லாம் கெட்டவனிடம் சேராதே வம்புல இழுத்து விட்டுவிடுவார்கள். இப்போது நல்லவனைப் பார்த்து அப்படி சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். நந்தா எப்போதும் திடீர் திடீரென அழைப்பார். எப்போது அழைத்தாலும் போவேன். நந்தா என்னை விட நல்லவன். சிலருக்குக் காலம் வெற்றியைத் தரும் அவருக்கு நல்ல காலம் வந்துவிட்டது. கதை படித்தவுடன் நான் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.

அனன்யா நான் கண்டுபிடித்த பெண் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அம்மா வடிவுக்கரசி அசத்தியிருக்கிறார். அப்பா பாரதிராஜா என்னைப்பார்த்துப் பண்பட்ட நடிகனாகிட்டே என்று பாராட்டினார். அவரோடு பணிபுரிந்த ஐந்து நாள் வரம். குழந்தைகள் மிக நன்றாக நடித்துள்ளனர். முன்பெல்லாம் சுகுமாரிடம் பதட்டம் தெரியும் ஆனால் இப்போது மிகப்பெரிதாக வளர்ந்துவிட்டார் மகிழ்ச்சி. இத்திரைப்படத்தைப் பற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி. இப்படம் கண்டிப்பாக வெல்ல வேண்டும். திருமாணிக்கம் களத்தில் நிற்கும் வெகுஜனத்தை கவரும். இப்படத்தை வெல்ல வைக்க வேண்டியது உங்கள் கடமை’ என்றார்.

நடிகை வடிவுக்கரசி, ”எப்போதும் என்னுடைய கேரக்டர் எல்லாம் போனிலேயே சொல்லிவிடுவார்கள். ஆனால் இயக்குநர் நந்தா பெரியசாமி, நான் வீட்டுக்கு வந்து கதை சொல்கிறேன் என்றார். யாருக்கு அம்மா யாருக்கு பாட்டி என்று தான் கதை கேட்பேன், ஆனால் இவர் வந்து கதை சொன்னதும், தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டேன். ஏன் அந்த ஹீரோ அவ்வளவு நேர்மையாக கஷ்டப்பட வேண்டும் எனக்கேட்டேன். என் கேரக்டர் சின்னது தான் ஆனால் என் குரு பாராதிராஜா சாருக்கு ஜோடி என்றதும் அவ்வளவு சந்தோசம்.

சமுத்திரகனி சாரைப் பார்த்து எனக்கு அவ்வளவு பொறாமையாக இருக்கும். தெலுங்கில் வில்லனாகக் கலக்குகிறார். இங்கு இப்படி அற்புதமாக நடிக்கிறார். இந்தப்படம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது. மிக மிக எதார்த்தமான கதை, எல்லோரும் மிக நன்றாக நடித்துள்ளார்கள். நந்தா என்னை மீண்டும் தட்டெல்லாம் கழுவ வைத்தார் அவ்வளவு வேலை வாங்கினார். ஆனால் படத்தை அவ்வளவு அற்புதமாக எடுத்துள்ளார். உங்கள் எல்லோருக்கும் படம் கண்டிப்பாகப் பிடிக்கும். நான் இந்தப்படத்தில் நடித்தது மிகவும் சந்தோசம். என் குருவோடு நடித்தது இன்னும் சந்தோசம். நேர்மையான நேர்மையோடு பார்த்துப் பாராட்டுங்கள்” என்றார்.

நிகழ்வில் நடிகர் சாம்ஸ், கவிஞர் சொற்கோ, ஒளிப்பதிவாளர் சுகுமார், இயக்குநர் விக்ரமன், இயக்குநர் கணேஷ் பாபு, தயாரிப்பாளர் ராஜா செந்தில்,
பாடலாசிரியர் சினேகன், நடிகர் ரவிமரியா, இயக்குநர் சரண், நடிகை அனன்யா, இயக்குநர் தம்பி ராமையா, கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவிக்குமார், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் அமீர் உள்ளிட்டோரும பேசினார்கள்.

Latest articles

அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்த அழகான லவ் டிரமா ‘நீ Forever’ மார்ச் 27-ம் தேதி ரிலீஸ்!

இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர்  உருவாகியுள்ள 'தருணம்' என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ்...

வெஞ்சென்ஸ் சினிமா விமர்சனம்

அதிகாரத்தில் இருக்க வேண்டும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தனக்கு கீழ் இருக்க வேண்டும், எந்த நேரமும் புகழ் போதையில் மிதக்க...

கெணத்த காணோம் சினிமா விமர்சனம்

வறட்சிக்குப் பேர்போன ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் தண்ணீர்ப் பஞ்சத்திற்கு தீர்வுகாண கிணறு தோண்டுகிறார்கள். அதிகபட்சம் 20 அடி...

More like this

அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்த அழகான லவ் டிரமா ‘நீ Forever’ மார்ச் 27-ம் தேதி ரிலீஸ்!

இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர்  உருவாகியுள்ள 'தருணம்' என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ்...

வெஞ்சென்ஸ் சினிமா விமர்சனம்

அதிகாரத்தில் இருக்க வேண்டும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தனக்கு கீழ் இருக்க வேண்டும், எந்த நேரமும் புகழ் போதையில் மிதக்க...
error: Content is protected !!