HomeGeneralஇளைய திலகம் பிரபு - விஜய் வர்மா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

இளைய திலகம் பிரபு – விஜய் வர்மா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

Published on

இளைய திலகம் பிரபு – விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் படத்தை ‘ரைட்டர்’ பட இயக்குநரும், ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப்  இயக்குகிறார்.
ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார்.
Romeo Pictures ராகுல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டார்க் ஹியூமர் ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தில், திரில்லர் கலந்த காமெடி திரைப்படமாக உருவாகவுள்ளது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. படப்பிடிப்பின் முதல் நாளான இன்று, நடிகர் விக்ரம் பிரபு மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் படப்பிடிப்புத் தளத்திற்கு நேரில் வருகை தந்து, படக்குழுவினரை சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இவர்களின் வருகை படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.
படத்தில் முத்துக்குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி மற்றும் அவினாஷ் ரகுதேவன் உள்ளிட்ட பலர் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா G.K படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். P.C. ஸ்டன்ட்ஸ் சண்டைப் பயிற்சியைக் கவனிக்க, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். நவ்ஷாத் அகமது ஆடை வடிவமைப்பையும், சக்தி வெங்கட்ராஜ் M கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர்.
வித்தியாசமான கதைக்களத்தில், அனுபவம் வாய்ந்த நடிகர் பிரபு மற்றும் இளம் தலைமுறை நடிகர்கள் இணையும் இந்தப் புதிய படம், ரசிகர்களுக்கு ஒரு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் தலைப்பு மற்றும் இதர முக்கிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.
பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பிலும், வெற்றிகரமான விநியோகத்திலும் முத்திரை பதித்த தயாரிப்பாளர் ராகுலின் Romeo Pictures நிறுவனம், தனது புதிய படத்தினை Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து தயாரிக்கிறது.

Latest articles

பல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் ஹெர் (HER) பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!

Be The One Longevity Centre நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிளினிக்கல் இயக்குநரான டாக்டர் இர்ஃபானா ஹமீத், பெண்களின்...

இரா.சரவணன் இயக்கத்தில் அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2.’

‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தனது...

என்னுடைய நடிப்பை தயாரிப்பு தரப்பு சிறப்பு என பாராட்டியிருக்கிறார்கள்! -சிக்மா பட விழாவில் நடிகர் சந்தீப் கிஷன் உற்சாகம்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க, வந்தை பிரேம் இயக்கும் ‘மறுஜென்ம காதல்’ படம் பூஜையுடன் துவக்கம்!  

வந்தை பிரேம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் 'மறுஜென்ம காதல்' திரைப்படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க...

More like this