HomeCinemaசிங் கீதம் சினிமா விமர்சனம்

சிங் கீதம் சினிமா விமர்சனம்

Published on

பிரபல இயக்குநர் 94 வயதாகும் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் இயக்கியுள்ள மியூசிகல் பேண்டஸி திரைப்படம்.

குபேரபுரம் என்ற கற்பனையான கிராமத்தில் மக்கள் அனைவரும் பேசும் வசனங்கள் அனைத்தும் பாடல்களாக மாறுவது தான் படத்தின் முக்கிய மையக்கதை. கதை மனிதர்களின் பேராசை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல விஷயங்களை அலசுகிறது.

படத்தில் முதல் 30 நிமிடங்களுக்கு மட்டுமே சாதாரண வசனங்கள் இடம்பெற்றுள்ளன. பிறகு வரும் 80 சதவீத காட்சிகள் பாடல்கள் மற்றும் இசையின் மூலமாகவே நகர்கின்றன.

தேவி ஸ்ரீ பிரசாத் இனிமையனா பாடல்களையும், பின்னணி இசையையும் வழங்கியுள்ளார். படத்தின் ஆன்மாவாக விளங்கும் இசை, காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்து ரசிகர்களைக் கட்டிப்போடுகிறது.

கதாநாயகனாக அயான், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து எதார்த்தமாக நடித்துள்ளார். நாயகி அஹில்யா பாம்ரூ மற்றும் ஷாலினி கொண்டிபுடி ஆகியோரின் நடிப்பும் பாராட்டும்படி அமைந்துள்ளது.

படத்தின் இரண்டாம் பாதி மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் உணர்வுப்பூர்வமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. படத்தில் விஜய் தேவரகொண்டாவின் கேமியோ அசத்தல்.

ஒளிப்பதிவு குபேரபுரம் கிராமத்தின் அழகையும், மாயாஜால உலகையும் கண்களுக்குக் குளிர்ச்சியாகக் காட்டியுள்ளது. கலை இயக்கம் கற்பனை உலகிற்குப் புதுமையான வடிவத்தைக் கொடுத்துள்ளது.

கடவுள் நம்பிக்கை மற்றும் மருத்துவம் என்ற பெயரில் நடக்கும் மோசடிகளையும் இயக்குநர் இதில் சாடியுள்ளார். இவ்வளவு சமூகக் கருத்துக்கள் இருந்தாலும், அவை எங்குமே திணிக்கப்பட்டதாகத் தெரியாமல் கதையோடு ஒட்டி வருவது படத்தின் பலம்.

வசனங்கள் குறைவாக இருந்து இசையால் காட்சிகள் நகர்வது வழக்கமான கமர்ஷியல் படங்களைப் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு சற்றே மாறுபட்ட அனுபவமாகத் தோன்றலாம். இசை ரசிகர்களை கண்டிப்பாக உற்சாக மனநிலைக்கு கொண்டு போகும்.

Rating 3.5 / 5

Latest articles

ஹார்ட்டீன் சினிமா விமர்சனம்

இன்றைய தலைமுறையினரின் உணர்வுகளையும், காதலையும் மையமாகக் கொண்ட படம். ஜெய்ப்பூரில் உணவகம் நடத்தி வரும் சிவாவும் சாதனாவும் காதலர்கள். ஒரு...

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வெப் சீரிஸ் விமர்சனம்

இன்ஸ்டா பிரபலங்களின் நடிப்புப் பங்களிப்பில் கிரிக்கெட் விளையாட்டையும் தீவிர ரசிகர்களின் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் டிராமா. ஒரு கிராமத்தைச்...

எம் ஜி ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித், சிம்பு – தனுஷ் வரிசையில் பவிஷ் இடம் பெறுவார்! -‘லவ் ஓ லவ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு...

பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ள 'லவ் ஓ லவ்'...

கொண்டாட்டமாய் நடந்த, கவின் நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தின் தொடக்க விழா!

கவின் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு தொடக்க விழா...

More like this