HomeCinema'மம்மட்டியான் ஸ்டார்ஸ்' வெப் சீரிஸ் விமர்சனம்

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வெப் சீரிஸ் விமர்சனம்

Published on

இன்ஸ்டா பிரபலங்களின் நடிப்புப் பங்களிப்பில் கிரிக்கெட் விளையாட்டையும் தீவிர ரசிகர்களின் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் டிராமா.

ஒரு கிராமத்தைச் சேர்ந்த மூன்று தீவிர கிரிக்கெட் ரசிகர்களும், ஒரு துடிப்பான இளம் பெண்ணும் கதையின் முதன்மைக் கதாபாத்திரங்கள். அவர்கள் தாங்கள் ஹீரோவாக கருதுகிற நாயகனான ஒரு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரின் கடைசிப் போட்டியை நேரில் காண வேண்டும் என்பது அவர்களின் லட்சியம். அதற்காக அவர்கள் கிராமத்தில் இருந்து சென்னைக்கு பயணக்கிறார்கள். அந்த பயணத்தில் பல சுவாரஸ்யங்கள் நிரம்பியிருக்க, குறிப்பிட்ட அந்தப் போட்டியின் டிக்கெட்டுகளைப் பெறுவதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களே கதையின் முக்கியப் பகுதி… 

ஹீரோவாக வைபவ் முருகேசனின் நடிப்பு யதார்த்தமாக உள்ளது. நாயகி லாவண்யா அன்பழகன் துடிப்பான பெண்ணாக வலம் வருகிறார். நண்பர்களாக நடித்துள்ள வெங்கட பாலமுரளி மற்றும் ஜெகபர் சாதிக் ஆகியோரின் டைமிங் காமெடி ரசிக்க வைக்கிறது. முக்கிய வேடங்களில் விவேக் பிரசன்னா மற்றும் சம்பத் ராம் தங்களின் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் மற்றும் சரத் ரவி தங்களுக்குக் கொடுத்த கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர்.

சவிர் சுதாகர் இயக்கத்தில் விறுவிறுப்பாக பாயும் இந்த தொடருக்கு சவிர் சுதாகருடன் நவீன் ராஜ்குமார், கலைச் செல்வன், வினு கார்த்திகேயன் இணைந்து திரைக்கதை, வசன பங்களிப்பு செய்துள்ளனர். வசனங்கள் எளிய மனிதர்களின் எதார்த்தப் பேச்சை பிரதிபலிக்கிறது.

பரத் தனசேகரின் பின்னணி இசை கதையின் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுக்குப் பெரும் பலம். பி.எம். ராஜ்குமாரின் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், சென்னையின் பரபரப்பையும் பதிவு செய்துள்ளது. பவித்ரனின் படத்தொகுப்பு கதையோட்டத்தின் விறுவிறுப்புக்கு உதவுகிறது.

காமெடி மற்றும் எமோஷன் ஆகிய இரண்டு கலவைகளும் சரியான விகிதத்தில் கலந்துள்ளதும்,

முதல் எபிசோடில் இருந்தே கதையின் வேகம் தொய்வில்லாமல் நகர்வதும், கிராமத்து மனிதர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் திரைக்கதை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளதும்,

எளிய கிராமத்து இளைஞர்களின் கனவுகளையும், அவர்களின் போராட்டங்களையும் ரசிகர்கள் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும் என்பதும் தொடரை ஆர்வமாக பார்க்க வைக்கிறது.

கிளைமாக்ஸ் காட்சியில் இன்னும் கொஞ்சம் கூடுதல் விறுவிறுப்பைக் கொண்டு வந்திருக்கலாம். 

கிரிக்கெட் என்கிற பரபரப்பான விளையாட்டை மையமாக வைத்துக்கொண்டு நட்பு, ஏமாற்றம், லட்சியம் என பலவற்றின் கலவையாக உணர்வுபூர்வமான கதையில் உருவாகியுள்ள இந்த தொடர் கிரிக்கெட் பிரியர்களை அதிகம் கவரும்.

Rating 3.5 / 5

Latest articles

ஹார்ட்டீன் சினிமா விமர்சனம்

இன்றைய தலைமுறையினரின் உணர்வுகளையும், காதலையும் மையமாகக் கொண்ட படம். ஜெய்ப்பூரில் உணவகம் நடத்தி வரும் சிவாவும் சாதனாவும் காதலர்கள். ஒரு...

எம் ஜி ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித், சிம்பு – தனுஷ் வரிசையில் பவிஷ் இடம் பெறுவார்! -‘லவ் ஓ லவ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு...

பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ள 'லவ் ஓ லவ்'...

கொண்டாட்டமாய் நடந்த, கவின் நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தின் தொடக்க விழா!

கவின் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு தொடக்க விழா...

அங்கீகாரம் திரைப்படம் ஒரு பார்வை

'அங்கீகாரம்' திரைப்படம் சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வாதாரப் போராட்டத்தை மிக எதார்த்தமாகப் பேசுகிறது. துப்புரவுத் தொழிலாளியாக வரும் தாய் மற்றும்...

More like this