HomeGeneralஎம் ஜி ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித், சிம்பு...

எம் ஜி ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித், சிம்பு – தனுஷ் வரிசையில் பவிஷ் இடம் பெறுவார்! -‘லவ் ஓ லவ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேச்சு 

Published on

பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘லவ் ஓ லவ்’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் ”பேசும்போது, இங்கு வந்த அனைவருக்கும் நன்றி. 1 1/2 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்ற முடியுமென்றால் கடவுளால் தான் முடியும். அந்த வகையில் தனஞ்செயன் சாருக்கும் தினேஷ் சாருக்கும் நன்றி.

கலை இயக்குனர் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். நாக துர்கா நன்றாக நடித்திருந்தீர்கள். சசி சார் நூறு சாமி என்ற சிறப்பான படைப்பை கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி” என்றார்.

நடிகர் பவிஷ் பேசும்போது ”எந்த மேடையாக இருந்தாலும், எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் தனுஷ் சாருக்கு தான் முதலில் நன்றி சொல்வேன். தனஞ்செயன் மற்றும் தினேஷ் சாருக்கு நன்றி. மகேஷ் சார் கதை கூறுவதில் சிறந்தவர்.

பிரதீப் மற்றும் இருவரும் சேர்ந்து பாக்சன் என்ற பெயரில் இசையமைத்திருக்கிறார்கள். சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். நாக துர்கா பயிற்சி இல்லாமல் பார்த்ததுமே நடனம் ஆடி வியக்க வைத்தார் என்றார். சண்டைப் பயிற்சி இயக்குனர் என்னுடைய பணியை எளிமையாக்கினார்” என்றார்.

நடிகை வனிதா விஜயகுமார் பேசும்போது, ”நான் சினிமாவை விட்டு சென்ற பிறகும் மீண்டும் என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள். என்னுடைய கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். எனக்கும் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது.

இன்றைய காலத்திற்கு தேவையான தலைப்பு லவ் ஓ லவ். அனைவரும் திரையரங்கம் சென்று பாருங்கள். நேர்மையான விமர்சனம் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

சுப்பிரமணிய சிவா பேசும்போது, ”செல்வமணி அண்ணன் பேசியது ரொம்ப முக்கியமானது. பவிஷ் அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கருப்பண்ண சாமி மூலம் தாத்தா எப்படி வெற்றி அடைந்தாரோ அதே போல பவிஷ் வர வேண்டும். எல்லா காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்.

எம் ஜி ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித், சிம்பு – தனுஷ் வரிசையில் பவிஷ் இடம் பெறுவார். ஆனால், அவருக்கு இணையாக யார் வருவார் என்று தெரியவில்லை” என்றார்.

Latest articles

கொண்டாட்டமாய் நடந்த, கவின் நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தின் தொடக்க விழா!

கவின் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு தொடக்க விழா...

அங்கீகாரம் திரைப்படம் ஒரு பார்வை

'அங்கீகாரம்' திரைப்படம் சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வாதாரப் போராட்டத்தை மிக எதார்த்தமாகப் பேசுகிறது. துப்புரவுத் தொழிலாளியாக வரும் தாய் மற்றும்...

உற்சாகமாய் நடந்த, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலக்ஷ்மி நடிக்கும்  ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’  படத்தின் துவக்க விழா!

யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலக்ஷ்மி, யாஷிகா ஆனந்த் நடிப்பில், கே.ஆர். செந்தில்நாதன் எழுதி இயக்கும் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ்...

கிராமத்து மக்கள் வெளியிட்ட ‘என்ன விலை’ திரைப்படத்தின் முதல் பார்வை!

இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களின் முதல் பார்வையை பெரும்பாலும் பிரபலங்களோ அல்லது டிஜிட்டல் தளங்களிலோ வெளியிடுகின்றனர். ஆனால், இதற்கு மாறாக...

More like this