HomeUncategorizedஅருள்நிதி – அமீர் நடிப்பில் ‘வேட்ட சாமி’ ஃபர்ஸ்ட் லுக் & கிளிம்ப்ஸ் வெளியீடு!

அருள்நிதி – அமீர் நடிப்பில் ‘வேட்ட சாமி’ ஃபர்ஸ்ட் லுக் & கிளிம்ப்ஸ் வெளியீடு!

Published on

அருள்நிதி, அமீர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான ‘வேட்ட சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. திரை பிரபலங்களான ஆர்.ஜே. பாலாஜி மற்றும் லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸை வெளியிட்டனர்.
முதன்மை கதாபாத்திரங்களில் அருள்நிதி மற்றும் அமீர் நடித்துள்ளனர்.  வழக்கமான கதாநாயகி கதாபாத்திரம் இல்லாமல் கதையையும் கதாபாத்திரங்களையும் மையப்படுத்தி நகரும் படமாக இப்படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
நெல்லை மாவட்ட பகுதியின் பெரும் காவல் தெய்வங்களான சங்கிலி பூதத்தார், சுடலை மாடன் உள்ளிட்ட குலதெய்வ வழிபாடுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை  அமைக்கப்பட்டுள்ளது. சாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி, தலைமுறைகளாக தொடரும் சமூகப் பிரச்சினைகளை,
மக்களின் இரத்தமும் சதையுமான வாழ்க்கைக்குள் சென்று பதிவு செய்யும் ஆக்‌ஷன் எமோஷனல் டிராமாவாக ‘வேட்ட சாமி’ உருவாகியுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அருள்நிதி சாமி வந்து ஆவேசமாக ஆடும் தோற்றத்தில் தீவிரமான பார்வையுடன் காட்சியளிக்கிறார். பின்னணியில் பிரம்மாண்டமான சாமி சிலை மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இது படத்தின் கிராமிய மற்றும் ஆன்மிக பின்னணியை வெளிப்படுத்துகிறது.
‘வேட்ட சாமி’ படத்தின் கிளிம்ப்ஸ், வில்லிசை கலைஞர் மாதவியின் குரலில் தொடங்கி, பாரம்பரிய தெய்வ வழிபாட்டை மையமாகக் கொண்டு அருள்நிதி மற்றும் அமீர் ஆகியோரின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது. கிராமிய வாழ்வியலுடன் ஆன்மீக உணர்வையும் கலந்து அமைக்கப்பட்டுள்ள இந்த கிளிம்ப்ஸ், ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலாகப் பரவி வருகின்றன.
இப்படத்தில் ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பேராடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி, இயக்குநர் தமிழ், கவிதா பாரதி, அயாஸ் கான், டி எஸ் கே, ஓ.ஏ.கே. சுந்தர், அர்ஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பம்பர் படத்தை இயக்கிய M. செல்வகுமார் எழுதி இயக்கும் இப்படத்தை 7 Miles Per Second Productions சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்குநராக G. துரைராஜ், சண்டைப்பயிற்சியை சிறுத்தை கணேஷ் கவனித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்கள் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், அருள்நிதி – அமீர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘வேட்ட சாமி’ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

Latest articles

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் மனதுக்கு நெருக்கமானது” -நடிகை ஸ்ரீதேவி!

படப்பிடிப்பு முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நடிகர்களின் மனதை விட்டு எளிதில் நீங்குவதில்லை. நடிகை ஸ்ரீதேவிக்கு ‘ஹைக்கூ’ திரைப்படம்...

ஹைக்கூ திரைப்படத்தில் என்னுடையது பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரம்! -நடிகை ஃபெமினா ஜார்ஜ்

வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ள நடிகை ஃபெமினா ஜார்ஜ், ‘ஹைக்கூ’ படத்தின் மூலம் ஆழமான...

ஜோஜு ஜார்ஜ் இயக்கும் ‘பரிபாடி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

https://www.youtube.com/watch?v=cfHo9hBpas8 ‘பனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கும் புதிய படமான ‘பரிபாடி’ படத்தின் ஃபர்ஸ்ட்...

உற்சாகமாக நடந்த யோகி பாபு நடித்துள்ள ‘சிங்காரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

ராக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘சிங்காரம்’ திரைப்படத்தை இயக்குநர் கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ளார். ஏ.எஸ்....

More like this