நாவல்கள் திரைப்படமாக உருவாகி வெற்றி பெற்று மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளன. அதற்கு ‘முள்ளும் மலரும்’ போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்.
அந்த வகையில் நாவல்களை திரைப்படங்களாக உருவாக்கும் முயற்சியில் ஆர்வம் கொண்ட சினிமாக்காரன்’ நிறுவனத்தின் எஸ் வினோத் குமார், நமது இன மற்றும் மானுடவியல் அம்சங்களை அங்கீகரிக்கும் விதத்தில் புதிய படமொன்றைத் தயாரிக்கிறார்.
இந்த படத்திற்கு பிரபல நாவலாசிரியர் பெருமாள் முருகன் கதை, வசனம் எழுதுகிறார். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘சேத்துமான்’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் தமிழ் இப்படத்தை இயக்குகிறார்.
‘கனா’ பட ஹீரோ தர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார். ‘ஜெய ஜெய ஜெய ஹே’, ‘ஹிருதயம்’ உள்ளிட்ட படங்களில் தனது இயல்பான நடிப்பால் பான் இந்திய ரசிகர்களை கவர்ந்த தர்ஷனா ராஜேந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் தமிழ் பேசும்போது, ‘‘அனைவருக்கும் பிடித்தமான ஒரு படைப்பை மீண்டும் உருவாக்கும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதை உருவாக்குவதில் கிடைக்கும் அற்புதமான அனுபவத்தை எதிர்நோக்கி இருக்கிறேன்.
நல்ல கதையம்சம் சார்ந்த திரைப்படங்களை ஊக்குவிக்கும் எஸ்.வினோத் குமார் போன்ற தயாரிப்பாளரைப் பெற்றிருப்பது உண்மையில் பெரிய பாக்கியம்” என்றார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் 1, 2023 அன்று காலை பெங்களூரில் தொடங்கியது.
படக்குழு:
கதை, வசனம்: பெருமாள் முருகன்
திரைக்கதை, இயக்கம்: தமிழ்
தயாரிப்பு: ‘சினிமாகாரன்’ எஸ்.வினோத் குமார்
ஒளிப்பதிவு: தீபக்
இசை: பிந்துமாலினி – வேதாந்த் பரத்வாஜ்
படத்தொகுப்பு: கண்ணன்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: பி.ஜெயமுருகன்
ஒலி வடிவமைப்பு: அந்தோணி பிஜே- ரூபன்
ஸ்டண்ட்: ‘பில்லா’ ஜெகன்
ஆடை வடிவமைப்பாளர்: ஈகா பிரவீன்
போஸ்டர் டிசைன்: சிவா
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா