லட்டு விவகாரம் பெரியளவிலான பிரச்சனைகளை உருவாக்கியிருக்கும் இந்த காலகட்டத்தில், 2013ல் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்த பவர் ஸ்டார், தற்போது ரசிகர்களுக்கு புது விதமான லட்டு ஒன்றை விருந்தளிக்க உள்ளார். ஆம், பவர் ஸ்டார் நடித்து இயக்கவுள்ள படத்திற்கு ‘பவர் லட்டு’ என பெயர் வைத்துள்ளார்.
இந்த படத்தை எல் வி கிரியேஷன்ஸ் டாக்டர் லோகு மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.
வைஜெயந்தி ஐ பி எஸ், ப்ருஸ்ட்லீ ரிடர்ன்ஸ் படங்களின் இயக்குநர் மனோஜ் கார்த்திக் காமராஜு இந்த படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் செந்தில் வெளியிட, பவர் ஸ்டாரும் தயாரிப்பாளரும் பெற்றுக் கொண்டனர். படத்தை 2 எஸ் என்டர்டெய்ன்மென்ட் எஸ் வினோத் குமார் வெளியிடவுள்ளார்.
வினோத் குமார் ஒளிப்பதிவு செய்யும், இந்த படத்திற்கு வசந்த் மோகன்ராஜ் இசையமைக்க, மதன் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார். படத்தை 2S Entertainment சார்பில் எஸ் வினோத் குமார் அவர்கள் வெளியிட உள்ளார்.
முன்னதாக, பவர் ஸ்டார் நடித்த ‘முன்தினம்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.