HomeGeneralவிஜய் மில்டனின் 'காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ படத்தின் ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்!

விஜய் மில்டனின் ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ படத்தின் ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்!

Published on

தமிழ்–தெலுங்கு இருமொழி படமாக உருவாகும் Gods and Soldiers திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “ட்ரைசர்” (Trailer + Teaser)-ஐ பிரபல இயக்குநர் A. R. முருகதாஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இயக்குநர் விஜய் மில்டன் இயக்கியுள்ள இந்தப் படம், தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

அதிரடி ஆக்ஷன், செண்டிமெண்ட் மற்றும் வலுவான கதாபாத்திரங்களின் பயணம் ஆகியவற்றை இணைத்து, இந்த ட்ரைசர் ஒரு தீவிரமான சினிமா உலகத்தை சிறிய நேரத்தில் மிகச் சக்திவாய்ந்த முறையில் காட்டுகிறது. “ட்ரைலர் + டீசர்” என்ற புதிய வடிவமைப்பில் உருவான இந்த ட்ரைசர், குறுகிய நேரத்தில், நீண்டநாள் நினைவில் நிற்கும் அனுபவத்தை வழங்குகிறது.

இந்த ட்ரைசரில் மிக முக்கியமாக திகழ்வது, அதிவேக எடிட்டிங், ஆழமான சவுண்ட் டிசைன் மற்றும் சாம் C. S. இன் அதிரடி பின்னணி இசை. ஒவ்வொரு காட்சியிலும் பதற்றத்தையும் விறுவிறுப்பையும் அதிகரிக்கும் இந்த இசை, படத்தின் முழு அனுபவத்தையும் உயர்த்துகிறது. ஒளிப்பதிவாளராகவும் இருக்கும் விஜய் மில்டன் அவர்களின் காட்சிப்பதிவு, “ஆக்ஷன் விருந்து” என்ற அளவுக்கு காட்சிகளை வலுப்படுத்துகிறது.

நடிகர் பரத் வலுவான கதாபாத்திரத்தின் மூலம் திரையில் கவனம் ஈர்க்க, ஆரி அர்ஜுனன் போலீஸ் வேடத்தில் ஸ்டைலான மற்றும் தீவிரமான தோற்றத்துடன் கவர்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் சுனில் ஷெட்டியின் வலுவான நடிப்பு, கதைக்கு மேலும் வலு மற்றும் ஆழத்தைச் சேர்க்கிறது. அதிரடி சஸ்பென்ஸாக ‘பால் டப்பா’ அவர்களின் தோற்றமும் ட்ரைசருக்கு கூடுதல் கவனத்தை கொடுக்கிறது.

இந்த ட்ரைசர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களையும், அதன் கதைத் தன்மையையும் தெளிவாக அறிமுகப்படுத்துகிறது. வேகமான ஆக்ஷன் காட்சிகளும், உணர்ச்சி நிரம்பிய தருணங்களும் இணைந்து, விஜய் மில்டன் அவர்களின் இயல்பான கதை சொல்லும் பாணியை பிரதிபலிக்கின்றன.

தனது தனித்துவமான படைப்பின் மூலம் எளிய மக்களின் வாழ்வைப்பற்றிப்பேசும் விஜய் மில்டன், ஆக்சன் என்பது வெறும் சண்டை காட்சிகளால் நிரம்பியது மட்டுமல்ல, அது உணர்ச்சியும் கதாபாத்திர ஆழமும் கொண்ட ஒரு செயல் என்று மீண்டும் ஒருமுறை இந்த காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

Rough Note Production தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம், ஆக்ஷன், செண்டிமெண்ட் மற்றும் சமூக கருத்துக்களை இணைக்கும் ஒரு முழுமையான திரையரங்கு அனுபவமாக உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் ராஜ் தருண், பரத், ஆரி அர்ஜுணன் , சுனில் ஷெட்டி, ராதா ரவி, கிஷோர், பால் டப்பா, அம்மு அபிராமி, பிரசன்னா பாலசந்திரன், பரத் சீனி, விஜேதா வசிஸ்ட், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆடியோ வெளியீடு, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ட்ரைசர் மூலம் தொடங்கிய இந்த அதிரடி ஆரம்பம், Gods and Soldiers திரைப்படத்தை ஒரு தீவிரமான மற்றும் முழுமையான சினிமா அனுபவமாக மாற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Latest articles

அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வரும் சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ படத்தின் ப்ரோமோ.

https://www.youtube.com/watch?v=tMzHwOWtLuE முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து...

உத்சவ் 2026 விழாவில் ‘தேவி ரத்னா’ விருதால் கௌரவிக்கப்பட்ட ரவி மோகன்; ரசிகர்களைக் கவர்ந்த கெனீஷாவின் அதிரடி இசை நிகழ்ச்சி!

பாலக்காடு நகரம், பக்தி, கலாச்சாரம், சினிமா மற்றும் இசை ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்ட கொண்டாட்டத்தை கண்டது....

இயக்குநர் பாபு விஜய் கதைக்குத் தேவையான இடத்தில் ஹீரோயிசத்தையும், கதையின் எடையையும் சமநிலைப்படுத்தி எடுத்திருக்கிறார்! – ‘சட்டென்று மாறுது வானிலை’ பட விழாவில் நடிகர் ஜெய் பேச்சு

ஜெய் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் திரில்லர் திரைப்படம் 'சட்டென்று மாறுது வானிலை.' இயக்குநர்...

நடிகர் விஷால் செய்ய முயற்சித்ததை முதலமைச்சர் ஜோசப் விஜய் செய்து முடித்தார்!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் விஷால், நடிகர் சங்கத்தை வழி நடத்தும் பெரும் பணியை...

More like this