Tuesday, April 22, 2025
spot_img
HomeGeneral‘பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி', ‘மெட்ராஸ் ரவுண்ட் டேபிள் இந்தியா 100', ‘கோவை சேவா நிலையம் இணைந்து ஏற்பாடு...

‘பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி’, ‘மெட்ராஸ் ரவுண்ட் டேபிள் இந்தியா 100′, ‘கோவை சேவா நிலையம் இணைந்து ஏற்பாடு செய்த விமானப் பயணம்… மகிழ்ச்சியில் மிதந்த ஆதரவற்ற குழந்தைகள்!

Published on

சென்னையில் உள்ள பிரீமியம் மால்களில் ஒன்றான பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்க்கைப் பயணத்தை மாற்றும் வகையில் அவர்களை குஷிப்படுத்தும் விதமாக விமான பயணத்திற்கு ஏற்பாடு செய்தது.

கோவையில் உள்ள சேவா நிலையம் என்ஜிஓ.வில் உள்ள இந்த குழந்தைகளை கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தின் மூலம் மெட்ராஸ் ரவுண்ட் டேபிள் இந்தியா 100′ அமைப்புடன் இணைந்து அழைத்து வந்தது.

இந்த சிறப்பு நிகழ்வில் பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியுடன் இணைந்து ரவுண்ட் டேபிள் இந்தியா 100 மற்றும் 20, லேடீஸ் சர்க்கிள் 11 ஆகியவை பங்கேற்றன. இவர்களின் முயற்சியின் மூலம் இந்தக் குழந்தைகள் முதல் முறையாக விமானத்தில், கோவையில் இருந்து சென்னைக்கு வந்து மீண்டும் கோவைக்குத் திரும்பியது, அவர்களுக்கு ஒரு ஆனந்தமான அனுபவத்தை வழங்கியது.

இந்த நிகழ்வானது குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கியதோடு, அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் மாலில் உள்ள தியேட்டரில் சினிமாப் படம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், தனித்துவமான ஷாப்பிங் அனுபவம் மற்றும் அங்குள்ள உணவகத்தில் சுவையான உணவு ஆகியவற்றையும் வழங்கி அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி வழங்கியது.

இது குறித்து பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியின் மைய இயக்குனர் சபரி நாயர் பேசும்போது, ‘‘அந்த குழந்தைகளுக்கு சிறகுகளை கொடுப்பது மட்டுமல்ல, அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளை வழங்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அதன் அடிப்படையில் தோன்றியதுதான் இந்த விமானப் பயணம். இந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் மற்றும் பெருமைப்படுகிறோம், அத்துடன் எங்கள் மாலில் பல்வேறு இடங்களை அவர்களுக்கு சுற்றிக் காண்பித்ததோடு, திரைப்படம், சுவையான உணவு ஆகியவற்றை அவர்களுக்கு வழங்கியது என்பது எங்களுக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது” என்றார்.

மெட்ராஸ் ரவுண்ட் டேபிள் 100′ அமைப்பின் தலைவர் டேபிளர் நிதின் விமல் மற்றும் கோயம்புத்தூர் ரவுண்ட் டேபிள் 20’ன் தலைவர் டேபிளர் ராகுல் ராஜன் ஆகியோர் பேசும்போது, ‘‘இந்தக் குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான எங்களின் முயற்சியில் பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி அளித்த ஆதரவிற்கு நாங்கள் மனப்பூர்வமாக நன்றி கூறிக் கொள்கிறோம். மேகங்களுக்கு மேலே விமானம் பறந்து சென்றபோது அதைப் பார்த்து குழந்தைகள் அனைவரும் மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இது அவர்களுக்கு மகிழ்ச்சியான தருணமாக இருந்தது. அத்துடன் அன்றைய நாள் முழுவதும் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக தனித்துவமான ஷாப்பிங் அனுபவத்திற்கு பெயர் பெற்ற பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் நாள் முழுவதும் சுவையான உணவுடன் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் பார்த்து அவர்கள் மேலும் மகிழ்ச்சி அடைந்தனர்” என்று தெரிவித்தனர்.

ஸ்னோ வேர்ல்ட், ஜங்கிள் அட்வென்ச்சர் மற்றும் மினி சோவில் ஷாப்பிங் செய்த பிறகு, குழந்தைகள் முதல் முறையாக 7டி சினிமாவை பார்த்த உடன் ஆனந்தத்தில் குதூகலித்து மகிழ்ந்தனர். அவர்களின் சிரிப்பொலி மால் முழுவதும் எதிரொலித்தது. மாலில் உள்ள பிரபலமான உணவகங்களான காரைக்குடி, மேட் ஓவர் டோனட்ஸ் மற்றும் ராஜ்தானி ஆகிய உணவகங்களில் அவர்களுக்கு மதியம் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

3வது ஆண்டாக இந்த நிகழ்ச்சியை ரவுண்ட் டேபிள் 100 மற்றும் 20 மற்றும் லேடீஸ் சர்க்கிள் 11 ஆகியவை இணைந்து நடத்தின. வானத்தில் பறக்க வேண்டும் என்ற குழந்தைகளின் கனவை நனவாக்கியதோடு அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ரவுண்ட் டேபிள் இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் சென்னை பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியின் பெருந்தன்மைக்கும் ஒரு சிறந்த சான்றாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.

Latest articles

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

More like this

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...
error: Content is protected !!