HomeCinema'பைனலி' பாரத் நடிப்பில் எழுத்தாளர் நிரஞ்சன் இயக்கும் ‘மிஸ்டர். பாரத்’ படத்தின் படப்பிடிப்பை குறுகிய காலத்தில்...

‘பைனலி’ பாரத் நடிப்பில் எழுத்தாளர் நிரஞ்சன் இயக்கும் ‘மிஸ்டர். பாரத்’ படத்தின் படப்பிடிப்பை குறுகிய காலத்தில் முடிக்க திட்டமிட்டு பணியாற்றும் படக்குழு!

Published on

யூ டியூப் பிரபலம் ‘பைனலி’ பாரத், எழுத்தாளர் நிரஞ்சன் கூட்டணியில் உருவாகும் ‘மிஸ்டர். பாரத் படத்தின் சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸ் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் படங்கள் பொதுவாக தீவிரமான ஆக்‌ஷன் அல்லது க்ரைம் த்ரில்லர்களாக இருக்கும். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, அவர்களின் வரவிருக்கும் படமான ‘மிஸ்டர். பாரத்’ ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியுள்ளது.

படத்தில் சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர்.சுந்தர் ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், குறுகிய காலத்தில் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

படம் பற்றி பேசிய இயக்குநர் நிரஞ்சன், “ஒவ்வொரு ஆர்வமுள்ள இயக்குநருக்கும் நடிகருக்கும் சிறந்த படம் கொடுக்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருக்கும். அந்த வகையில், சினிமாவில் சிறந்த தயாரிப்பு நிறுவனத்துடன் பணியாற்றுவது எங்களுக்கு மகிழ்ச்சியான விஷயம். இது மிகவும் எளிமையான கதைக்களம். கதாபாத்திரத்தை மையப்படுத்தி கதை நகரும்.

பிடிவாதமான குணம் கொண்ட ஒருவன் காதல் திருமணத்தை விரும்புகிறான். ஆனால், ஒரு பெண்ணே முன் வந்து அவனிடம் காதல் சொல்லும்போது அதை அவனால் உணரக்கூட முடியவில்லை. இது நிறைய ஆச்சரியங்களைக் கொண்ட எண்டர்டெயின்மெண்ட் படம்” என்றார்.

சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர், “திறமையான ‘பைனலி’ டீமுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பாரத் மற்றும் நிரஞ்சன் இருவரும் தங்கள் வீடியோக்கள் மூலம் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். அவர்கள் ‘மிஸ்டர். பாரத்’ மூலம் திரையுலகி அடியெடுத்து வைப்பது பெருமையாக உள்ளது. திறமையாளர்களை ஊக்குவிப்பதை நாங்கள் எப்போதும் விரும்புகிறோம். மேலும் ‘மிஸ்டர். பாரத்’ பார்வையாளர்களுக்கு பிடித்த ஒன்றாக இருக்கும். இந்த தலைப்பை எங்களுக்கு வழங்கிய ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.

படக்குழு:-
இசை: பிரணவ் முனிராஜ்,
ஒளிப்பதிவு: ஓம் நாராயண்,
படத்தொகுப்பு: திவாகர் டென்னிஸ்,
இசையமைப்பாளர்: பிரணவ் முனிராஜ்,
கலை இயக்குநர்: பாவனா கோவர்தன்,
ஆடை வடிவமைப்பாளர்: நவதேவி ராஜ்குமார்,
ஒலி வடிவமைப்பாளர்: சுரேன்.ஜி & அழகியகூத்தன்,
நடன இயக்குனர்: அசார்,
ஒப்பனை: சயது மாலிக் எஸ்,
ஸ்டண்ட்: அம்ரின் அபுபக்கர்,
அசோசியேட் இபி: ஆதவன் சுப்ரமணியன்,
தயாரிப்பு நிர்வாகி – டி.செல்வராஜ்,
வண்ணக்கலைஞர்: கௌஷிக் கே.எஸ்,
விளம்பர வடிவமைப்பு: அமுதன் பிரியன்,
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: பிரதீப் பூபதி. எம்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: ஆர். சிபி மாரப்பன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா

 

 

Latest articles

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது....

More like this

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...