HomeUncategorizedகருப்பு சினிமா விமர்சனம்

கருப்பு சினிமா விமர்சனம்

Published on

காவல்துறையும் நீதித்துறையும் நேர்மையாக செயல்படுவதில்லை என்கிற மோசமான சூழ்நிலையை மாற்ற கருப்பு சாமி, கருப்பு கோட் அணிகிற கதை.

ஒரு முதியவரிடமிருந்து 60 பவுன் நகைகள் திருடு போகிறது. காவல் துறை திருடர்களைப் பிடித்து, நகைகளைக் கைப்பற்றி, 45 சவரனை மட்டும் முதியவரிடம் ஒப்படைக்கும் முடிவுக்கு வருகிறது. அதையும் அவர் நீதிமன்றம் மூலமே பெற்றுக் கொள்ள முடியும். அந்த நகைகள் கிடைத்தால்தான் அதை விற்று உயிருக்கும் போராடும் தன் மகளுக்கு சிசிச்சையளித்துக் காப்பாற்ற முடியும்.

காவல்துறை 15 பவுன் நகைகளை அபகரித்துக் கொள்ள, நீதிமன்றம் மூலமாக நகைகளை திரும்பப் பெறுவதில் தாமதம் மேல் தாமதமாகிறது. தான் நம்பிய அட்வகேட்டே தன்னை ஏமாற்றிக் கொண்டிருப்பது அந்த முதியவருக்கு தெரியவருகிறது. அவர் கோர்ட் வளாகத்திலிருக்கும் கருப்புசாமியிடம் கதறியழுகிறார்.

அவரது கண்ணீரைத் துடைக்க, அவருக்கு நடந்து கொண்டிருக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்க கருப்பு சாமி நீதிமன்றத்துக்குள் வக்கீலாக நுழைகிறார். கடவுளுக்கென்றே இருக்கிற சூப்பர் பவர் எதையும் பயன்படுத்தாமல் சாதாரண மனிதனாக மாறி, நடக்கும் தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார். அப்படி தள்ளப்பட்டவர் என்னவெல்லாம் செய்கிறார், எப்படியெல்லாம் செய்கிறார் என்பதே கதையோட்டம்…

படத்தில் மாஸ் ஹீரோக்கள் இருந்தால், அவர்கள் அராஜகங்களை அடக்கி ஒடுக்க களமிறங்கினால் எப்படியான ஹீரோயிஸம் காட்டுவார்களோ அதையெல்லாம் கச்சிதமாக, கம்பீரமாக செய்திருக்கும் சூர்யா, கருப்பு சாமியாக ஆக்ரோச ஆட்டம் போடுவது மிரள வைக்கிறது.

தான் எடுத்துக் கொள்கிற வழக்கில் ஜெயிப்பதற்காக மனிதாபிமானத்தை ஓரங்கட்டிவிட்டு சாமர்த்தியமாக செயல்படுகிற, தேவையெனில் வன்முறையைக் கையிலெடுக்கிற வக்கீலாக ஆர் ஜே பாலாஜி. அவரது கேரக்டர் நீதித்துறையின் கேவலமாக பக்கங்களை எடுத்துக் காட்டுகிற விதமாக இருக்க, நடிப்பில் பரவாயில்லை எனும்படி வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.

தீமைகளை அழிக்க, தீயவர்களை வேட்டையாட களமிறங்கிய கருப்பு சாமிக்கு உதவி செய்கிற வழக்கறிஞராக த்ரிஷாவின் பங்களிப்பு போதுமான அளவில் இருக்கிறது. எலும்பும் தோலுமாக மாறிப்ப்ப்யிருக்கிற அவருக்கு சூர்யாவுடன் காதல், ஆடல் பாடல் என ஏதுமில்லை என்பது ஆறுதல்.

நகைகளைப் பறி கொடுத்து தவிக்கிறவராக மலையாள நடிகர் இந்திரன்ஸ் பொருத்தமான நடிப்பால் ஆளுமையாக வலம் வருகிறார். நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி, ஷிவதா, ஸ்வாஷிகா, மன்சூர் அலிகான், அனயா மாயா என மற்றவர்களின் நடிப்பு நிறைவு.

சாய் அபயங்கரின் இசையில் பாடல்கள் ஓரளவு பரவச மூடுக்கு தள்ளிவிட, பின்னணி இசையில் அதிரடி காட்டுவதாக நினைத்துக் கொண்டு சத்தத்தைக் கூட்டியிருப்பதைத் தவிர விசேஷமாக எதையும் செய்யவில்லை. கருப்பு சாமி வதம் செய்கிற காட்சிகளின் பின்னணி இசையில் பம்பை, உடுக்கை என எந்தவொரு பாரம்பரிய வாத்தியங்களின் இசையும் கலந்திருப்பதாக தெரியவில்லை. அதனாலேயே காட்சிகளில் உயிரோட்டம் குறைந்திருக்கிறது.

பிரமாண்டமான காட்சிகள் மேலும் பிரமாண்டமாக தெரிவதற்கு உதவியிருக்கிறது ஜி கே விஷ்ணுவின் ஒளிப்பதிவு.

கடவுளே வந்தாலும் காவல்துறையிலும் நீதித்துறையிலும் நடக்கிற கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியாது என்கிற கசப்பான உண்மையை மையமாக வைத்துக் கொண்டு, தனக்கான காட்சிகளை அதிகப்படுத்தி, கதைநாயகனுக்கான காட்சிகளை குறைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி. அந்த திரைக்கதை லாஜிக் என்றால் என்னவென்று கேட்கிற விதத்தில் இருப்பதால், உண்மைக்கு நெருக்கமாக இல்லாததால் கருப்பு சாமி ரசிகனின் பொறுமையை சோதிக்கும் சாமியாகியிருக்கிறது.

Rating 3 / 5

Latest articles

என்னுடைய நடிப்பை தயாரிப்பு தரப்பு சிறப்பு என பாராட்டியிருக்கிறார்கள்! -சிக்மா பட விழாவில் நடிகர் சந்தீப் கிஷன் உற்சாகம்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க, வந்தை பிரேம் இயக்கும் ‘மறுஜென்ம காதல்’ படம் பூஜையுடன் துவக்கம்!  

வந்தை பிரேம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் 'மறுஜென்ம காதல்' திரைப்படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க...

பீப் சினிமா விமர்சனம்

புத்திசாலித்தனமான கதைப்பின்னலில் 'பீப்.' ஹீரோ ராகவ்க்கு புகைப்படங்களை வைத்து, அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்து...

டோரதி’யின் உலகையும் இளையராஜாவின் இசையையும் தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்க ஸ்பெஷல் லாரி ரோடு ட்ரிப்! 

 ’டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாவதை முன்னிட்டு, இளையராஜாவின் இசையுடன் தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும்...

More like this

என்னுடைய நடிப்பை தயாரிப்பு தரப்பு சிறப்பு என பாராட்டியிருக்கிறார்கள்! -சிக்மா பட விழாவில் நடிகர் சந்தீப் கிஷன் உற்சாகம்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க, வந்தை பிரேம் இயக்கும் ‘மறுஜென்ம காதல்’ படம் பூஜையுடன் துவக்கம்!  

வந்தை பிரேம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் 'மறுஜென்ம காதல்' திரைப்படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க...

பீப் சினிமா விமர்சனம்

புத்திசாலித்தனமான கதைப்பின்னலில் 'பீப்.' ஹீரோ ராகவ்க்கு புகைப்படங்களை வைத்து, அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்து...