HomeCinemaஸ்ரீ லீலா நடித்த 'கிஸ் மீ இடியட்' செப்டம்பர் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

ஸ்ரீ லீலா நடித்த ‘கிஸ் மீ இடியட்’ செப்டம்பர் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

Published on

ஸ்ரீ லீலா நடிப்பில் 2019-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி 100 நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்த ‘கிஸ்’ திரைப்படம் தமிழில் ‘கிஸ் மீ இடியட்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. படம் செப்டம்பர் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் கதாநாயகன் வீராட். ரோபோ ஷங்கர், நாஞ்சில் விஜயன், அஸ்வதி என ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். சென்டிமெண்ட் கலந்த இளமை ததும்பும் காதல் கதையாக கன்னடத்தில் இந்த படத்தை இயக்கிய ஏ பி அர்ஜுனே தமிழிலும் இயக்கியுள்ளார்.

கல்லூரி மாணவியான ஸ்ரீ லீலா கல்லூரியில் சக மாணவிகளுடன் சேட்டை செய்த காரணத்திற்க்காக கல்லூரி முதல்வரால் ஒரு நாள் தண்டனையாக வகுப்பறையிலிருந்து வெளியேற்றப்படுகிறார். அந்த கோபத்தில் கல்லூரியை விட்டு வெளியே வரும் ஸ்ரீ லீலா கல்லூரிக்கு வெளியில் கல்லூரி முதல்வரின் படம்பொரித்த பேனரில் கல்லை எடுத்து வீசுகிறாள். அந்த கல் பேனரில் பட்டு பிரதிபலித்து ரோட்டில் வந்து கொண்டிருக்கும் வீராட் என்பவரின் காரில் படுகிறது. இதனால் அந்த கார் சுவற்றில் மோதி சேதம் அடைகிறது.

அந்த சேதத்திற்கு நஷ்டஈடாக வீராட், ஸ்ரீ லீலாவிடம் நான்கு லட்சம் கேட்கிறார். தரவில்லை என்றால் போலீஸில் புகார் அளிப்பேன் என்று சொல்கிறார். அதற்கு ஸ்ரீ லீலா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று மறுக்கிறார். அதற்கு வீராட் மாற்று வழி ஒன்றை சொல்கிறார். என்னவென்றால் ஒரு முத்தம் கொடு அல்லது இரண்டு மாதம் தன்னுடைய உதவியாளராக வேலை செய்ய சொல்கிறார்.

பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின் ஸ்ரீ லீலா உதவியாளராக வேலை செய்ய ஒப்புக்கொள்கிறார். இந்த இரண்டு மாத காலகட்டத்திற்குள் ஸ்ரீ லீலா சில நிகழ்வின் மூலம் தனது காதலை வெளிப்படுத்த முற்பட்டு அதனை சொல்ல வரும்பொழுது, வீராட் அவளை வேலையை விட்டு அனுப்புகிறான் . அவளை அனுப்பிய பிறகுதான் அவள் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்பதை உணர்கிறான். பின்பு தனது காதலை வெளிப்படுத்த பல முறை முயற்சிக்கிறான். அது வெற்றி பெற்றதா? இல்லையா? என்பது தான் கதை.

படக்குழு:-

இணை இயக்குனர்கள் – எலிசபெத், நாகன் பிள்ளை

ஒளிப்பதிவு – ஜெய்சங்கர் ராமலிங்கம்

இசை – பிரகாஷ் நிக்கி

பாடல்கள் – மணிமாறன்

Latest articles

இந்த படத்தில் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளேன்; நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது! -சென்னையில் நடந்த எங்கள் தங்கம் பட விழாவில் நடிகை சமந்தா பேச்சு

சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'எங்கள் தங்கம்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகை சமந்தா...

மக்கள் தலைவா சினிமா விமர்சனம்

தமிழகத்தின் தேர்தல் அரசியல் எந்தளவுக்கு சீர் கெட்டுப் போயிருக்ககிறது என்பதையும், ஓட்டு போடும் மக்களிடமிருக்கும் முட்டாள்தனத்தையும் பொலிடிக்கல் சட்டயர்...

ஜூலை 17ல் வெளியாகிறது ‘அன்பே டயானா.’ அசத்தலான போஸ்டரில் அறிவித்த படக்குழு.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம்,...

இந்தியாவில் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) படத்திற்கான முன்பதிவு தொடக்கம்… ரசிகர்கள் பிரீமியம் பெரிய திரை வடிவங்களில் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு!

'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது! டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஜூலை 30...

More like this