HomeCinemaதேசிய விருது வென்ற பிரியாமணி, ஆளுமையான நடிகை ரேவதி கூட்டணியின் ‘குட் வைஃப்' தொடரின் டீசரை...

தேசிய விருது வென்ற பிரியாமணி, ஆளுமையான நடிகை ரேவதி கூட்டணியின் ‘குட் வைஃப்’ தொடரின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டது!

Published on

தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இணைய தொடர் ‘குட் வைஃப்.’ இந்தத் தொடரை நடிகை ரேவதி இயக்கியுள்ளார். இதன் மூலம் இயக்குநராக ரேவதி ஓடிடியில் அறிமுகமாகிறார்.

ஜியோஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாக இருக்கும் இந்த தொடரின் டீசரை ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. இது சமூகவலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம்.

இதே சீரிஸ் இந்தியிலும் ‘தி டிரையல்- பியார், கணூன், தோகா’ என்ற பெயரில், நடிகர்கள் கஜோல் மற்றும் ஜிஷூ சென்குப்தா நடிப்பில் உருவானது. இது ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகி வெற்றிப்பெற்றது. இப்போது தமிழ் ரசிகர்ளுக்கு ஏற்றபடி இந்த தொடர் உருவாகியுள்ளது.

ஓடிடியில் இயக்குநராக அறிமுகவாது குறித்து நடிகை- இயக்குநர் ரேவதி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதாவது, “இந்தி ரீமேக்கில் ‘குட் வொய்ஃப்’ வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து தமிழில் இதனை இயக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இந்தக் கதையில் கதாநாயகி கதாபாத்திரம் மிகவும் வலுவானது. தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் தொழில் சார்ந்தும் நிறைய சவால்களை அவர் எதிர்கொள்கிறார். இதனை திரைக்கதையில் இருந்து படமாக்குவதை மிகவும் விரும்பி செய்தேன். பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் போன்ற திறமையான நடிகர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ஜியோஹாட்ஸ்டார் மற்றும் பானிஜே ஆசியாவுடன் ஓடிடி உலகில் நான் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சிகரமான அனுபவம்” என்றார்.

கிருஷ்ணன் குட்டி, ஹெட் ஆஃப் கிளஸ்டர், எண்டர்டெயின்மென்ட் (சவுத்) ஜியோஸ்டார், “தமிழ் ரசிகர்களுக்கு ‘குட் வொய்ஃப்’ சீரிஸை வெளியிட ஆர்வமாக இருக்கிறோம். இதன் இந்தி வெர்ஷனான ‘தி டிரையல்- பியார், கணூன், தோகா’ பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் அப்படியான வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம். உயர்தர தொழில்நுட்பம், என்கேஜிங்கான கண்டெண்ட், ரேவதி போன்ற இயக்குநர், ப்ரியாமணி, சம்பத் ராஜ் போன்ற நடிகர்கள் மற்றும் பனிஜய் ஆசியா ஆகியோருடன் இணைந்து நல்ல படைப்பை பார்வையாளர்களுக்குக் கொடுக்க இருக்கிறோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

தீபக் தார், ஃபவுண்டர் & குரூப் சிஇஓ, பானிஜே ஆசியா & எண்டேமோல்ஷைன் இந்தியா பகிர்ந்து கொண்டதாவது, “’குட் வொய்ஃப்’ சீரிஸின் இந்தி வெர்ஷனான ‘தி டிரையல்- பியார், கணூன், தோகா’ பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தக் கதையை தமிழிலும் கொண்டு வர ஆர்வமாக இருக்கிறோம். பானிஜே ஆசியா தென்னிந்தியாவை முக்கிய சந்தையாக கருதுகிறது. இங்கு தரமான உள்ளடக்கம் கொடுப்பதற்கும் ஆர்வம் காட்டுகிறது. அதற்கான முதல்படியாக ‘குட் வைஃப்’ இருக்கும். தரமான கதைகளைத் தொடர்ந்து கொடுத்து வரும் ஜியோஹாட்ஸ்டாருடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி” என்றார்.

கேட்டி பைக், இயக்குநர், இண்டர்நேஷனல் ஃபார்மட்ஸ் ஃப்ரம் பாராமவுண்ட் குளோபல் கன்டென்ட் டிஸ்டிரிபியூஷன், ’குட் வொய்ஃப்’ சீரிஸின் ஃபார்மட் உரிமைகளை பெற்றுள்ளது. ”உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை ‘குட் வொய்ஃப்’ கவர்ந்திருப்பது மகிழ்ச்சி. இந்தியாவில் வளர்ந்து வரும் மாறுபட்ட கதைசொல்லல் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வலுவான கதையை பார்வையாளர்களுக்குக் கொண்டு வர இருக்கிறோம். ஜியோஹாட்ஸ்டார் மற்றும் பானிஜே ஆசியா ஆகியவை தமிழ் ரசிகர்களுக்காக இந்தக் கதையை எவ்வாறு மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க நாங்கள் ஆவலாக உள்ளோம்” என்றார்.

ஒரிஜினல் யு.எஸ். சீரிஸில் ராபர்ட் மற்றும் மிஷேல் கிங் ஆகியோர் கிரியேட்டர்ஸ் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர்களாகப் பணியாற்றினர். ரிட்லி ஸ்காட், டேவிட் ஜுக்கர் மற்றும் ப்ரூக் கென்னடி ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பணியாற்றினர். ’குட் வைஃப்’ தொடரை சிபிஎஸ் ஸ்டுடியோஸ், ஸ்காட் ஃப்ரீ புரொடக்ஷன்ஸ் மற்றும் கிங் சைஸ் புரொடக்ஷன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து தயாரித்தது. பாராமவுண்ட் குளோபல் கன்டென்ட் டிஸ்ட்ரிபியூஷன் இதன் ஃபார்மட் உரிமைகளை பெற்றுள்ளது.

Latest articles

பருந்து சினிமா விமர்சனம்

சமூகத்துக்கும், உரிய வயதும் பக்குவமும் இல்லாமல் காதலிக்கிறவர்களுக்கும் கருத்து சொல்கிற படம். மதுரைப் பக்கமுள்ள ஒரு கிராமத்தில் ஒரு வசதியான...

காவேரி மருத்துவமனையின் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றப் பிரச்சனைகளுக்கான ‘சமத்வா’ சிறப்பு மையத்தை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார்!

உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற பிரச்சனைகளுக்கு விரிவான, ஒருங்கிணைந்த சிகிச்சை, அத்துடன் வாழ்க்கை முறை மாற்றத்திற்கான பிரத்யேக...

சூனியக்காரி, தேவதை, ப்ளாக் ஹோல்… ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

https://www.youtube.com/watch?v=bKJve0D7p-Y GM Morgan Films தயாரிப்பில், R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஃபேண்டஸி திரைப்படம் ‘டிரோன்ஸ்’ (Drones). சித்தி...

SharonPly Honours Five Masters of Woodcraft at Seventh I AM STRONGEST Awards!

CARVED IN STRENGTH celebrates artisans preserving generations of craftsmanship while adapting traditional woodcraft for...

More like this

பருந்து சினிமா விமர்சனம்

சமூகத்துக்கும், உரிய வயதும் பக்குவமும் இல்லாமல் காதலிக்கிறவர்களுக்கும் கருத்து சொல்கிற படம். மதுரைப் பக்கமுள்ள ஒரு கிராமத்தில் ஒரு வசதியான...

காவேரி மருத்துவமனையின் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றப் பிரச்சனைகளுக்கான ‘சமத்வா’ சிறப்பு மையத்தை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார்!

உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற பிரச்சனைகளுக்கு விரிவான, ஒருங்கிணைந்த சிகிச்சை, அத்துடன் வாழ்க்கை முறை மாற்றத்திற்கான பிரத்யேக...

சூனியக்காரி, தேவதை, ப்ளாக் ஹோல்… ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

https://www.youtube.com/watch?v=bKJve0D7p-Y GM Morgan Films தயாரிப்பில், R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஃபேண்டஸி திரைப்படம் ‘டிரோன்ஸ்’ (Drones). சித்தி...