HomeCinemaஅரசியல் பேசாம சமூக கருத்துகளை மேலோட்டமா சொல்லி இருக்கோம்! -‘சிங்கப்பூர் சலூன்' படம் பற்றி சொல்கிறார்...

அரசியல் பேசாம சமூக கருத்துகளை மேலோட்டமா சொல்லி இருக்கோம்! -‘சிங்கப்பூர் சலூன்’ படம் பற்றி சொல்கிறார் நடிகர் ஆர் ஜே பாலாஜி

Published on

ஆர்.ஜே.பாலாஜி கதைநாயகனாக நடித்து வரும் ஜனவரி 25-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘சிங்கப்பூர் சலூன்.’

எல்கேஜி, மூக்குத்தி அம்மன் படங்களுக்குப் பிறகு வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஆர்ஜே பாலாஜி நடிக்கும் 3-வது படம் இது. படத்தில் சத்யராஜ், லால், ரோபோ சங்கர், மீனாட்சி சவுத்ரி, கிஷன் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார்.படம் பற்றி ஆர்.ஜே பாலாஜி பேசியபோது, “இந்த படம் எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. படத்தில் மக்களுக்குத் தேவையான கமர்சியல் அம்சங்கள் எல்லாம் கலந்திருக்கும். லோகேஷ் கனகராஜ் , ஜீவா கேமியோ ரோலில் நடிச்சிருக்காங்க. ஒரு பெரிய நடிகரும் நடிச்சிருக்காரு. யாரென்று இப்ப சொல்ல முடியாது, படத்தை பார்த்து நீங்களே பயங்கர சர்ப்ரைஸ் ஆவீங்க. ஆரம்பத்துல இந்த கதையை உள்வாங்க எனக்கு கடினமா இருந்தது. அப்புறம் போகப்போக நான் பழகிக்கிட்டேன். சமூக கருத்துகளை மேலோட்டமா சொல்லி இருக்கோம் அரசியல் பேசாத இந்த படம் மக்களுக்கு ரொம்ப பிடிக்கும்” என்றார்.

இயக்குனர் கோகுல் பேசும்போது, “இந்த திரைப்படம் 60% காமெடி மீதி 40% எமோஷன், சென்டிமென்ட் என்ற பல பரிமாணங்கள் உள்ளடக்கி இருக்கு. நம்ம எப்படி ஒரு சாதாரண சலூன் கடைக்கு போயிட்டு முடி எல்லாம் வெட்டுனதுக்கு அப்புறமா நம்மள பார்க்கும்போது ஒரு திருப்தி, ஒரு சந்தோஷம் வர மாதிரி இந்த திரைப்படத்தை பார்த்து முடிச்சதுக்கு அப்புறமா உங்க எல்லாருக்கும் நிச்சயமாக தோன்றும். என்னுடைய நகைச்சுவை இந்த படத்துல இருக்கு. அது இல்லாம , வித்தியாசமாகவும் முயற்சி செஞ்சிருக்கோம். நான் என்னோட வாழ்க்கையில பார்த்த நிறைய முடி திருத்துபவர்கள் தான் இந்த கதைக்கான ஒரு இன்ஸ்பிரேஷன். இன்னிக்கு இருக்கக்கூடிய எல்லா பெரிய நடிகர்களும் அவங்களுடைய அப்பாயிண்ட்மெண்ட்காக தான் வந்து காத்துக்கிட்டு இருக்காங்க. அந்த அளவுக்கு இன்னைக்கு இந்த தொழில் வந்து ஒரு மிகப்பெரிய ஒரு இடத்தை போய் அடைஞ்சிருக்கு. இந்த உள் கருத்த மையமா வச்சு, இதிலேயே நிறைய விஷயங்களை இந்த படத்தில் பேசி இருக்கோம். கண்டிப்பா உங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்” என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கணேஷ் பேசுகையில், “சிங்கப்பூர் சலூன் இதுவரைக்கும் நான் தயாரித்த திரைப்படங்களை விட அதிக பொருட்செலவுல தயாராகி இருக்கும் திரைப்படம். ஆர். ஜே. பாலாஜியால இப்படியும் நடிக்க முடியுமா அப்படின்னு மக்கள் வியக்குற மாதிரியான ஒரு கதை அம்சமும் ,அவரும் அதுக்கு ஏத்த மாதிரி நடித்திருக்கிறார், எனக்கு இந்த கதை மேல பெரிய நம்பிக்கை இருக்கிறது. ஃபர்ஸ்ட் ஆஃப் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து மகிழ வைக்கும் கதையாகவும், செகண்ட் ஹாஃப் எமோஷன் மோட்டிவேஷன் இந்த மாதிரி பல சுவாரசியம்சங்களை இந்த திரைப்படம் உள்ளடக்கி இருக்கும்” என்றார்.

Latest articles

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த...

சர்வதேச ரசிகர்களை மிரள வைத்த மலையாள சினிமா: டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’

சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க...

’விட்ரா மச்சா…’ எதிர்பாராத திருப்பங்களுடன் துள்ளல் இசையில் உருவான வித்தியாசமான காதல் தோல்வி பாடல்!

தமிழில் இசை சார்ந்த கதையாடலுக்கான புதிய களமாக சுயாதீன இசை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. திரைப்படப் பாடல்களுக்கு கிடைக்கும்...

More like this

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த...

சர்வதேச ரசிகர்களை மிரள வைத்த மலையாள சினிமா: டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’

சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க...