சமூகத்தில் இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் உண்மைச் சவால்களை உணர்வுப்பூர்வமாக பிரதிபலிக்கும் கதையுடன், இளைஞர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களை கவரும் வகையில் தனித்துவமான கருத்தில் உருவாகியுள்ள படம் ‘யூஃபோரியா.’
பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய குணசேகர் இயக்கியுள்ள இந்த படம் இன்றைய இளைஞர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கிடையேயான உறவுகள், புரிதல்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை நெஞ்சைத் தொடும் விதத்தில் ஆராய்ந்து பேசுகிறது.
‘ஒக்கடு’ படத்தில் ரசிகர்களை கவர்ந்த குணசேகர் – பூமிகா சாவ்லா கூட்டணி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘யூஃபோரியா’ திரைப்படத்தில் மீண்டும் இணைகிறது. பூமிகாவுக்காக வடிவமைக்கப்பட்ட சக்திவாய்ந்த கதாபாத்திரம் இப்படத்தின் முக்கிய ஹைலைட்டாக அமைந்துள்ளது.
‘ஒக்கடு’ படத்தை இயக்கியதும், விஜய்யின் மெகா பிளாக் பஸ்டர் ‘கில்லி’ படத்திற்கு கதை எழுதியவரிடமிருந்து உருவாகும் ஒரு புதிய, அர்த்தமுள்ள சினிமா அனுபவம் தான் ‘யூஃபோரியா.’
கௌதம் வாசுதேவ் மேனன், சாரா அர்ஜுன், நாசர், ரோஹித்,விக்னேஷ் கவி ரெட்டி, லிகிதா யலமஞ்சலி, அடாலா பிருத்வி ராஜ்,கல்ப லதா, சாய் ஸ்ரீனிகா ரெட்டி, அஷ்ரிதா வேமுகந்தி, மேத்யூ வர்கீஸ், ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, ரவி பிரகாஷ், நவீனா ரெட்டி, லிகித் நாயுடு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
‘துரந்தர்’ மெகா பிளாக் பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, சாரா அர்ஜுன் நடித்துள்ள அடுத்த முக்கியமான படம் இது.
மெகா பிளாக் பஸ்டர் ‘ருத்ரமாதேவி’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய இயக்குநர் குணசேகர் – ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் கூட்டணி, இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.
படம் 2026 பிப்ரவரி 6-ம் தேதி, தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.

