தன் பாதையிலிருந்து துளியும் விலகாமல் பாலா படைத்திருக்கும் ‘வணங்கான்.’
தவறானவர்களைப் பார்த்தால் ஆக்ரோஷமாகப் பாய்ந்து அடித்து உதைத்து தண்டிக்கிற அருண் விஜய், இரண்டு பேரை கொடூரமாக கொலை செய்கிறார். அதற்கான காரணத்தை போலீஸிடம் சொல்ல மறுக்கிறார். சிறைக்கும் செல்கிறார். அங்கிருந்து திரும்பியபின் இன்னொரு கொலை செய்யவும் தயாராகிறார்.
நடந்த கொலைகள் எதற்காக? அடுத்த கொலைக்கு என்ன அவசியம்? விறுவிறுப்பான திரைக்கதையில் பதில் இருக்கிறது.
அருண் விஜய் வழக்கமான பாலா பட ஹீரோக்கள் போல் தோற்றம் மாறியிருப்பதோடு, வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். கேடு கெட்ட மனிதர்களை துவம்சம் செய்யும்போது கட்டுங்கடங்காத ஆவேசம், தங்கையிடம் பாசம் காட்டும்போது குழந்தையின் மென்மை என வசன மொழி தவிர்த்த உடல்மொழியால் ஆளுமையாக நிறைந்திருக்கிறார்.
அருண் விஜய்க்கு ஜோடியாக வருகிற ரோஷினி பிரகாஷின் துறுதுறுப்பு ரசிக்க வைக்கிறது.
சந்தோஷம், பரிதவிப்பு என அந்த எல்லைக்கும் இந்த எல்லைக்குமாய் பயணப்பட்டிருக்கிறது தங்கையாக வருகிற ரிதாவின் தேர்ந்த நடிப்பு.
வழக்குகளை ஊடுருவிப் பார்த்து தீர்ப்பளிக்கிற ஜட்ஜாக மிஷ்கின், கொலைக்குற்ற விசாரணை அதிகாரியாக சமுத்திரகனி என ஏற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கிற நடிகர், நடிகைகளின் அணிவகுப்பு படத்திற்கு பலம்.
பயங்கர சம்பவங்கள் அரங்கேறும் பரபரப்பான காட்சிகளை சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை வேறோரு பரிமாணத்துக்கு எடுத்துச் செல்கிறது. ஜீ வி பிரகாஷின் இசையில் பாடல்கள் கதையின் நகர்வுக்கு
ஒளிப்பதிவு மிகமிக தரம்.
எளிய மக்களின் வலிகளை மையப்படுத்திய வழக்கமான பாலாவின் ஃபார்முலாவில் கருவாகி உருவான வணங்கான் விருதுகளைக் குவிப்பான்.
Rating 3.5 / 5