பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இரட்டை வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை செல்வி. மனு பகார்க்கருக்கு வேலம்மாள் நெக்ஸஸ் பெருமையுடன் வரவேற்பளித்தது.
கடந்த ஆகஸ்டு 20-ம் தேதி நடைபெற்ற விழாவில் அவரது சாதனையைப் பாராட்டியதோடு வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு உதவித்தொகை ரூபாய் 2,04,75,570 (ரூபாய் இரண்டு கோடியே நான்கு இலட்சத்து எழுபத்தைந்தாயித்து ஐநூற்று எழுபது) வழங்கப்பட்டது.
சர்வதேச, இந்திய மற்றும் மாநில அளவில் சாதனைபடைத்த 642 மாணாக்கருக்கு இத்தொகை வழங்கப்பட்டது. இந்த உதவித்தொகையானது இளம் விளையாட்டு வீரர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதையும் விளையாட்டுத் திறன்களை மென்மேலும் வளர்ப்பதற்காக கடின உழைப்பிற்கான அங்கீகாரத்தை உயர்த்தும் நோக்கமாக இத்தொகையானது வேலம்மாள் பள்ளியின் சார்பாக வழங்கப்பட்டது.
மனு பகார்க்கர் பேச்சு கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகத்தையும் புத்துணர்ச்சியையும் தருவதாக இருந்தது. இந்த விழாவானது பள்ளியில் பயிலும் மாணவர்களின், விளையாட்டு வீரர்களின் விடாமுயற்சியையும், அர்ப்பணிப்பையும் ஊக்குவிப்பதாக அமைந்தது.