நாகா இயக்கியிருக்கும் அசல் தமிழ் இணையத் தொடர் ‘தலைவெட்டியான் பாளையம்.’ எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த நகைச்சுவை இணைய தொடர் தமிழகத்தின் தொலைதூர கிராமமான தலைவெட்டியான் பாளையத்தில் தனது புதிய மற்றும் அறிமுகம் இல்லாத சூழலில் சவால்களை எதிர்கொள்ளும் மாநகரத்தை சேர்ந்த ஒருவரின் பயணத்தை மையமாகக் கொண்டிருக்கிறது.
இந்த குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இணைய தொடரில் திறமையான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த இணையத் தொடரில் அபிஷேக் குமார், சேத்தன் கடம்பி, தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சாமி , பால்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
விசித்திரமான கதாபாத்திரங்கள்- எதிர்பாராத சவால்கள் நிறைந்த கிராமத்தில் பயணிக்கும் சித்தார்த்தின் கிராமப்புற வாழ்வியலின் விசித்திரங்களுக்கு ஏற்ப.. பார்வையாளர்களை அவரின் உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். கூர்மையான உரையாடல்கள்- நகைச்சுவையான ‘பஞ்ச்’ லைன்கள்- மற்றும் மகிழ்வான தருணங்களுடன் கிராமத்தின் இயல்பான வாழ்வியலை ஆராய்கிறது. அதே தருணத்தில் கிராமப்புற பின்னணியின் நிலவியல் அழகை நேர்த்தியாக காட்சிப்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த இணைய தொடர் உண்மையான ஆசைகள்- உயர்ந்த லட்சியங்கள்- கருணை- பொறாமை – போன்ற உணர்ச்சிகளின் பிரதிபலிப்பாகவும், அதே தருணத்தில் எளிய கதையாகவும் அமைந்திருக்கிறது. நடிகர்களின் சிறப்பான நடிப்பும், அவர்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரங்களின் ஆழத்தையும், யதார்த்தத்தையும் திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். இதனால் பார்வையாளர்களுக்கு பல பரிணாமங்கள் கிடைக்கின்றன. எம். எஸ். கிருஷ்ணாவின் ஆத்மார்த்தமான மெல்லிசை இந்த இணைய தொடரின் வசீகரத்தை உயர்த்துகிறது.
இந்த தொடர் பிரைம் வீடியோவில் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செப்டம்பர் 20-ம் தேதி தமிழிலும், ஆங்கில வசனங்களுடனும் பிரத்யேகமாக வெளியாகிறது.