மூத்த பத்திரிகையாளர் கவிதாவின் ‘இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் ‘சாக்லேட்’, ‘கொலை விளையும் நிலம்’ ஆகிய படைப்புகளை உருவாக்கி வரவேற்பை பெற்றது. அடுத்த படைப்பாக, சீனியர் நடிகர் ஜனகராஜ் நடிக்க ‘தாத்தா’ என்ற குறும்படத்தை தயாரித்துள்ளது.
நரேஷ் இயக்கியுள்ள இந்த குறும்படத்தில் ரேவதி பாட்டி, ரிஷி, கயல் தேவராஜ், முருகன் மந்திரம், பிரபாகர், ஷ்யாம், தீபா பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடைய சகோதரியின் மகள் ஆமினா ரஃபீக் இந்த குறும்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். வினோத் ஒளிப்பதிவு செய்ய, சமர் கலை இயக்குநராக பணிபுரிய, ஆடை வடிவமைப்பாளராக பங்களிப்பு தந்துள்ளார்.
16 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படம் விரைவில் ஷார்ட்பிளிக்ஸ் யூ டியூப் தளத்தில் வெளியாகவுள்ளது. முன்னதாக இந்த குறும்படத்தின் டீசரை நடிகர் சூரி இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்..