Thursday, January 23, 2025
spot_img
HomeCinemaமாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் மனம் மயக்கும் பாடல்களுக்கு சொந்தக்காரர் திபு நினன் தாமஸ்!

மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் மனம் மயக்கும் பாடல்களுக்கு சொந்தக்காரர் திபு நினன் தாமஸ்!

Published on

இசையமைப்பாளர் திபு நினன் தாமஸின் மெல்லிசைப் பாடல்கள் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாது ரசிகர்கள் மனதிலும் மறக்க முடியாத ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர் மெயின்ஸ்ட்ரீம் திரைப்பட இசைத்துறைக்குள் அவர் நுழைந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ளது. ‘மரகத நாணயம்’ படத்தின் ‘நீ கவிதைகளா’ பாடல் முதல், ’சித்தா’ படத்தின் சமீபத்திய சூப்பர்ஹிட் பாடலான ‘கண்கள் ஏதோ’ வரை இசை ஆர்வலர்கள் அவரது மெல்லிசையால் உடனடியாக ஈர்க்கப்பட்டனர். ’நீ கவிதைகளா’ பாடல் 2017 இல் வெளியாகி ஆறு ஆண்டுகள் கடந்து இருந்தாலும் ஸ்பாட்டிஃபையின் முதல் 10 தரவரிசைகளில் இப்போதும் உள்ளது.

குறுகிய காலத்தில் இசைத்துறையில் அவர் அற்புதமான சாதனைகளை செய்துள்ளார் என்பது அவரது டிஸ்கோகிரஃபி பார்க்கும்போதே புரியும். ‘கனா’ படத்தின் ஆல்பம் இவரை ஒரே இரவில் இன்னும் பிரபலமாக்கியது. இந்தப் படத்தின் மொத்த ஆல்பமும் ‘வாயாடி பெத்த புள்ள’ மற்றும் ‘ஒத்தையடி பாதையில்’ பாடல்கள் மூலம் 800+ மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், யூடியூப் தளத்தில் 450+ மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அதேபோல, ‘பேச்சுலர்’ படத்திலிருந்து இவரது ‘அடியே’ பாடலும் இளைஞர்கள் மத்தியில் சாட்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. ஸ்பாட்டிஃபை தளத்தில் 100 மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீம்களை எட்டிய முதல் தென்னிந்திய பாடல் என்ற சாதனையை இந்தப் பாடல் வைத்துள்ளது. ஸ்பாட்டிஃபை தளத்தில் இவ்வளவு அதிக பார்வையாளர்களை அடைந்த முதல் தென்னிந்திய இசையமைப்பாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் மற்றும் மியூசிக் பிளாட்ஃபார்ம்களில் இந்த சாதனைகளைப் படைத்தது மட்டுமல்லாது, இந்தப் பாடல் 100K+ ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸாகவும் இளைஞர்கள் மத்தியில் வைரலானது. மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இவரது பாடல்கள் பல பிராந்தியங்களைத் தாண்டி பலரது இதயங்களை வென்றது. திபுவின் பாடல்கள் இசைப்பிரியர்களுக்கு மட்டுமல்லாது, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவரது சமீபத்திய படைப்பான ‘சித்தா’வில் இருந்து ‘கண்கள் ஏதோ’ பாடல் தமிழ் மொழி அல்லாதவர்களையும் கூட தாளம் போட வைத்து அவர்களின் இசைப்பட்டியலில் சேர்க்க வைத்தது.

சந்தேகத்திற்கு இடமின்றி, திபு நினன் தாமஸின் இசை ரசிகர்களிடம் லூப் மோடில் கேட்க வைத்து மயக்குகிறது. அவர் இப்போது மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா & கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘மிஸ்டர். எக்ஸ்’ படம், ஜிதின் லால் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் ஐந்து மொழிகளில் 3டியில் வெளியாகும் பான்-இந்தியப் படமான ’அஜயந்தே ரெண்டம் மோஷனம்’ (ARM) மற்றும் இன்னும் நான்கு தமிழ்ப் படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

Latest articles

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2’ மார்ச் 27-ம் தேதி வெளியாகிறது!

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ' வீர தீர சூரன் - பார்ட்...

குடும்பஸ்தன் படத்தின் கதை ரசிகர்கள் தங்களை பொருத்திப் பார்த்துக்கொள்ளும் விதத்தில் இருக்கும்! -நடிகர் மணிகண்டன்

ஒரு படம் வெற்றியடைந்தால் அந்தப் படத்தின் பெயர் நடிகரின் பெயரோடு சேர்வது வழக்கம். இது நடிகர் மணிகண்டணின் ஒவ்வொரு...

ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக்கை வெளியிட்டது டிஸ்னி+ ஹாட்ஸ்டார்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ்...

’குடும்பஸ்தன்’ உங்களை சிரிக்க வைத்து,மனஅழுத்தத்தைக் குறைக்கும்! -இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி

மணிகண்டன் நடித்து வெளியான ’குட்நைட்’, ‘லவ்வர்’ படங்களின் அடுத்தடுத்த வெற்றியையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 'குடும்பஸ்தன்' உருவாகியுள்ளது. இந்தப் படம்...

More like this

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2’ மார்ச் 27-ம் தேதி வெளியாகிறது!

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ' வீர தீர சூரன் - பார்ட்...

குடும்பஸ்தன் படத்தின் கதை ரசிகர்கள் தங்களை பொருத்திப் பார்த்துக்கொள்ளும் விதத்தில் இருக்கும்! -நடிகர் மணிகண்டன்

ஒரு படம் வெற்றியடைந்தால் அந்தப் படத்தின் பெயர் நடிகரின் பெயரோடு சேர்வது வழக்கம். இது நடிகர் மணிகண்டணின் ஒவ்வொரு...

ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக்கை வெளியிட்டது டிஸ்னி+ ஹாட்ஸ்டார்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ்...