‘யுவ சாம்ராட்’ நாக சைதன்யாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, இயக்குநர் சந்து மொண்டேட்டியோடு நாக சைதன்யா இணைந்து பணியாற்றும் படத்திற்கு ‘தண்டேல்’ என பெயர் சூட்டப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
தண்டேல் என்றால் ஆற்றல் மிக்கவர், கவர்ச்சியானவர், லட்சியத்தையும், கவனத்தையும் கொண்டவர் என பலவிதமாக குறிப்பிடலாம். ஒருவருக்கு ஏதாவது ஒரு உண்மையான ஆசை இருந்தால் அதற்காக அனைத்தையும் கொடுக்க முடியும் எனப் பொருள் கொள்ளலாம்.
‘தண்டேல்’ என்பது முற்றிலும் மாறுபட்ட பின்னணியைக் கொண்ட காதல் கதை. உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.
படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். சூப்பர் ஹிட்டான ‘லவ் ஸ்டோரி’க்குப் பிறகு இருவரும் இணைந்துள்ள இரண்டாவது படம் இது.
நாக சைதன்யா இந்த திரைப்படத்தில் மீனவராக நடிக்கிறார். இந்த தோற்றத்திற்காக கடந்த சில மாதங்களாக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டார்.
ஃபர்ஸ்ட் லுக்கில் அவர் நீண்ட முடி மற்றும் தாடி உடன் முரட்டுத்தனமான தோற்றத்தையும் கொண்டிருக்கிறார். கையில் துடுப்புடன் ஒரு படகில் அமர்ந்திருக்கும் நாக சைதன்யா வேட்டி அணிந்து, தனது செதுக்கப்பட்ட உடலமைப்பை கதாபாத்திர தோற்றத்திற்காக தீவிரமாக பார்ப்பது போல் தோன்றுகிறார். அந்த போஸ்டர் படத்தின் தலைப்பை போல் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை என்றாலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது. பெரும்பாலும் அசலான இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.
இப்படத்தின் கதையில் இசைக்கு நல்ல வாய்ப்பு இருப்பதால் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த காதல் கதைக்காக பிரத்யேகமாக இசையமைக்கிறார். ஷாம் தத் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ஸ்ரீ நாகேந்திர தாங்கலா கலை இயக்கத்தை கவனிக்கிறார்.
படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்லு அரவிந்த் வழங்க, தயாரிப்பாளர் பன்னி வாசு தயாரிக்கிறார்.