அதியமான், அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்ததாக வரலாற்றில் படித்துள்ளதை நினைவு படுத்திக் கொண்டு இந்த செய்தியை படிக்கவும்.
மன்சூர் அலிகானின் ‘சரக்கு’ படத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக நடித்துள்ளார் அரசியல்வாதியும் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத். படத்தின் ஒரு காட்சியில் ‘சங்க காலம் என்கிற தங்க காலத்திலேயே, அவ்வையும் அதியமானும் சேர்ந்து குடிக்கலையா?’ என்று வசனம் பேசியுள்ளார்.
அதியமான், அவ்வைக்கு சரக்கு ஊற்றி கொடுத்த ரேஞ்சுக்கு அவர் பேசியுள்ள வசனம் படத்தை பிரிவியூ காட்சியில் பார்த்த பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.
படம் டிசம்பர் 22-ம் தேதி வெளியாபின், குறிப்பிட்ட அந்த வசனம் சர்ச்சையை கிளப்பப் போவது உறுதி.