சென்னையில், புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலர் (Protector of Emigrants) என்ற உயரிய பொறுப்பிலிருக்கிற ஸ்ரீ ஸ்ரீ பிரம்ம குமார் ஐ.எஃப்.எஸ்., (இணைச் செயலாளர் OE பிரிவு & PGE) கடந்த நவம்பர் 15, 2023 அன்று சென்னை வந்தபோது, சென்னை பிராந்தியத்தின் ஆட்சேர்ப்பு முகவர்களை (Recruiting Agents) சந்தித்தார். முகவர்கள் கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய அவர் சட்டப்பூர்வமான மற்றும் பாதுகாப்பான இடம்பெயர்வு பற்றிய தகவல்களைப் பரப்ப வேண்டியதன் அவசியத்தை இந்த சந்திப்பின் போது வலியுறுத்தினார்.
வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக சட்டவிரோதமாக இடம்பெயர்ந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சுருக்கமாக விளக்கினார். பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், விரைவில் அவற்றை செயல்படுத்த இருப்பதையும் பற்றி விவரித்தார்.
தமிழ்நாடு பிராந்திய முகவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளுக்கு விழாவின் நிறைவில் நன்றி தெரிவித்தனர்.
அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி கூட்டம் நிறைவுற்றது.