HomeCinemaசிலம்பரசன் டி ஆர், சந்தானம் நடிக்கும் படம் பூஜையுடன் துவங்கியது!

சிலம்பரசன் டி ஆர், சந்தானம் நடிக்கும் படம் பூஜையுடன் துவங்கியது!

Published on

சிலம்பரசன் டி ஆர் கல்லூரி மாணவனாக நடிக்கும் புதிய படத்துக்கு தற்காலிகமாக STR49 என பெயரிடப்பட்டுள்ளது. அந்த படத்தின் பூஜை, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, இன்று நடைபெற்றது.

விண்டேஜ் சிலம்பரசனை திரையில் மீண்டும் காணும் வகையில், கல்லூரி பின்னணியில் கலக்கலான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகிறது.

பார்க்கிங் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், மாறுபட்ட களத்தில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், கமர்ஷியல் கொண்டாட்டமாக இந்த படத்தை இயக்கவுள்ளார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிலம்பரசனுடன் சந்தானம் நடிக்கிறார். இளைஞர்களின் நெஞ்சம் கவர்ந்த நாயகி கயாது லோஹர் நாயகியாக நடிக்கிறார். வி டி வி கணேஷ் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

பல முன்னணி நட்சத்திர நடிகர்களின் நடிப்பில் பல பிரமாண்ட படைப்புகளை உருவாக்கி வரும், டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் மிகப்பெரும் பொருட்செலவில் இந்த  படத்தை பிரமாண்டமாகத் தயாரிக்கிறார்.

Latest articles

'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கியுள்ள 'பிளாஸ்ட்'...

நல்ல கதைகளைக் கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் வெகு சிலரில் மீரா கதிரவனும் ஒருவர்! -‘ஹபீபி’ பட விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பற்றி இயக்குநர் பார்த்திபன் பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு...

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!!

‘சேயோன்’ - சிவகார்த்திகேயன், சக்திவாய்ந்த ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடிக்கும், இத்திரைப்படத்தின்...

AI தொழில்நுட்பத்தின் பங்களிப்பில் கனெக்ட் மீடியா, மெர்குரி மூவீஸ் மற்றும் WPP புரொடக்ஷன் இணைந்து இளையராஜாவின் திரையுலக 50 ஆண்டுகளை கௌரவிக்கும் புது முயற்சி! ரசிகர்கள் ஆர்வம்.

https://www.youtube.com/watch?v=yomruKvYrWc கலாசாரம், சினிமா மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை ஒன்றிணைந்து,  முன்னெப்போதும் இல்லாத முயற்சியாக, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை...

More like this