Tuesday, June 17, 2025
spot_img
HomeCinemaசார் படம் தந்த வெற்றியும் கிடைத்த பாராட்டுக்களும்...  அடுத்த கட்டத்தை எட்டிய இயக்குநர் போஸ் வெங்கட்!

சார் படம் தந்த வெற்றியும் கிடைத்த பாராட்டுக்களும்…  அடுத்த கட்டத்தை எட்டிய இயக்குநர் போஸ் வெங்கட்!

Published on

நடிகர் போஸ் வெங்கட் தமிழ்த் திரைத்துறையில் தான் இயக்கிய முதல் இரண்டு படங்களிலேயே சமூக அக்கறை மிக்க தனித்துவமிக்க படைப்பாளி எனும் பாராட்டைப் பெற்றிருக்கிறார்.

சமீபத்தில் SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவான, ‘சார்’ கல்வியின் அவசியம் மற்றும் சமூக மாற்றத்தைப் பேசும் அழுத்தமான படைப்பு என்ற பாராட்டைப் பெற்றுள்ளது.

தமிழ் தொலைக்காட்சித் தொடரில் துணை நடிகராக அறிமுகமான போஸ் வெங்கட் மிக விரைவிலேயே, தன் தனித்துவமான நடிப்புத் திறமையால் நல்ல நடிகன் என மக்களின் மனதில் இடம் பிடித்தார். அடுத்தகட்டமாக வெள்ளித்திரையிலும் தன் பன்முகத் திறமையால் வெற்றி பெற்றார்.

ஒரு நடிகனாக மட்டுமே சுருங்கி விடாமால் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி தன் பயணத்தை செழுமைப்படுத்தியவர், தற்போது ஒரு படைப்பாளியாக மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். தன் முதல் படமான ‘கன்னிமாடம்’ படத்திலேயே ஜாதிய அடுக்குமுறை, கௌரவக் கொலை பற்றிப் பேசி ஒரு அழுத்தமான படைப்பாளியாக கவனம் பெற்ற போஸ் வெங்கட், தற்போது சார் மூலம் தமிழின் தனித்துவமான படைப்பாளிகளுல் ஒருவராக வெற்றி பெற்றுள்ளார்.

கல்வியை மையப்படுத்தி, ஆசிரியர்களின் தியாகத்தையும், நம் சமூகத்தில் கல்வி தந்த மாற்றத்தையும் ஒரு அருமையான கமர்ஷியல் திரைப்படமாக தந்து, ரசிகர்களிடம் தனக்கென தனி இடத்தைப் பெற்றிருக்கிறார் போஸ் வெங்கட். ரசிகர்கள், விமர்சகர்கள், திரைக் கலைஞர்கள் என பலபுறங்களிலிருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அடுத்த கட்டமாக மிக விரைவில் பெரிய முன்னணி நட்சத்திரத்தோடு இணையவுள்ளார். தன் இரண்டாவது படத்தின் மூலம் ஏ லிஸ்ட் இயக்குநர்கள் எனும் இடத்திற்கு நகர்ந்துள்ளார் போஸ் வெங்கட்.

இயக்குநர் வெற்றிமாறனின் திரைப்பட நிறுவனமான கிராஸ்ரூட் நிறுவனம் இப்படத்தை பெருமையுடன் வழங்கியுள்ளது. ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை வெளியிட்டு வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கோட் படத்திற்குப் பிறகு சார் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்டுள்ளது.

படம் ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவர் பாராட்டைப்பெற்று, திரையரங்குகளில் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. இப்படத்திற்கான வரவேற்பால் திரையரங்கு எண்ணிக்கையும் கூட்டப்பட்டுள்ளது.

Latest articles

பிக்பாக்கெட் படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்து வாழ்த்திய புதுச்சேரி முதலமைச்சர்!

'பிக் பாக்கெட்' என்ற படத்தை, ஓ.டி.டியில் வெளியாகி பிரபலமான ரிவால்வர் படத்தை இயக்கிய ஜெ எஸ் ஜூபேர் அகமத்...

கண்ணப்பா திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்!

தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த்...

தேசிய விருது வென்ற பிரியாமணி, ஆளுமையான நடிகை ரேவதி கூட்டணியின் ‘குட் வைஃப்’ தொடரின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டது!

தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இணைய தொடர் ‘குட்...

More like this

error: Content is protected !!