Friday, March 28, 2025
spot_img
HomeCinemaஆர் ஜே பாலாஜியுடன் இயக்குநர் செல்வராகவன் நடிக்கும் சொர்க்கவாசல் விரைவில் ரிலீஸ்!

ஆர் ஜே பாலாஜியுடன் இயக்குநர் செல்வராகவன் நடிக்கும் சொர்க்கவாசல் விரைவில் ரிலீஸ்!

Published on

ஆர் ஜே பாலாஜி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்கும் ஆக்ஷன் டிராமா திரைப்படம் ‘சொர்க்கவாசல்.’ சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’, ‘காலா’ திரைப்படங்களில் உதவி மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிய சித்தார்த் விஸ்வநாத் இயக்குகிறார்.

இயக்குநர் செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமாகிய நட்டி (நடராஜன் சுப்பிரமணியன்) மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலங்களான சானியா ஐயப்பன், ஷரஃப் உதீன் மற்றும் ஹக்கீம் ஷா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கருணாஸ், இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன் மற்றும் மெளரிஷ் ஆகியோர் சொர்க்கவாசல் திரைப்படத்தில் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

சிறையை பிரதான கதைக்களமாக கொண்டு உருவாகும் இந்தப் படம், சிறைச் சுவர்களுக்கு உள்ளே இருப்பவர்களின் கடுமையான வாழ்வியல் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் என்று இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் தெரிவித்தார்.

‘சொர்க்கவாசல்’ திரைப்படத்திற்காக தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டு கதாபாத்திரமாகவே மாறி, கடின உழைப்பை ஆர் ஜே பாலாஜி வழங்கியுள்ளார். இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் சிறப்பான பங்களிப்போடு அனைவரும் ரசிக்கக்கூடிய படமாக ‘சொர்க்கவாசல்’ உருவாகியுள்ளது என்றார் இயக்குநர்.

படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் கதையை தமிழ்ப்பிரபா மற்றும் அஷ்வின் ரவிச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் எழுதியுள்ளார்.

மம்முட்டி நடித்து பெரும் வெற்றி பெற்ற ‘பிரம்மயுகம்’ படத்திற்கு இசையமைத்த கிறிஸ்டோ சேவியர் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார்.

ஒளிப்பதிவை பிரின்ஸ் ஆண்டர்சன் கவனிக்க, செல்வா ஆர் கே படத்தொகுப்பை கையாளுகிறார்.

கலை இயக்கம்: எஸ் ஜெயச்சந்திரன், சண்டை பயிற்சி: தினேஷ் சுப்பராயன், உடைகள் வடிவமைப்பு: ஸ்ருதி மஞ்சரி, உடைகள் தலைமை: அனந்தா நாகு, ஒப்பனை: சபரி கிரீசன், ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி மற்றும் எஸ் அழகியக்கூத்தன், ஒலிப்பதிவு: வினய் ஶ்ரீதர், வி எஃப் எக்ஸ்: லார்வென் ஸ்டுடியோஸ், டிஐ: பிக்ஸெல் லைட் ஸ்டூடியோஸ், காஸ்டிங் இயக்குநர்: வர்ஷா வரதராஜன், பப்ளிசிட்டி வடிவமைப்பு: கபிலன் செல்லையா, மக்கள் தொடர்பு: நிகில் முருகன், ப்ரோமோஷன்ஸ்: ஏகேடி, ஆடிட்: ஃபினாங்கி கன்சல்டிங், லீகல்: டி எஸ் லீகல், ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர்: பி எஸ் ராஜேந்திரன், நிர்வாக தயாரிப்பு: விக்ரம் வைபவ் ஆர் எஸ், தயாரிப்பு ஆலோசனை: ஏ கே அனிருத், கிரியேட்டிவ் ஆலோசனை: கிருஷ்ணா மாரிமுத்து.

Latest articles

காமெடி படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு என்பதை மனதில் வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்! -‘கொஞ்சநாள் பொறு தலைவா’ படத்தின் டிரெயலர் வெளியீட்டு விழாவில் ஆருத்ரன் பிக்சர்ஸ் கலியமூர்த்தி பேச்சு

அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், ஆருத்ரன் பிக்சர்ஸ் எஸ் முருகன் தயாரிப்பில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள 'கொஞ்ச...

ராணுவ வீரரின் காதல் கதையில் உருவாகும் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ படத்துக்கு கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை!

அனுராதா அன்பரசுவின் ஏஏஏ பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி.' இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா பின்னணி இசையமைத்தால்...

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலில் கிடைத்த அமோக வரவேற்பு… உற்சாகத்தில் படக்குழு!

  விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்துக்கு அற்புதமான...

More like this